”எழில்” மொழியில் பயன்படுத்தப்படும் சொற்கள் (Keywords)பற்றிச் சமூக வலைத்தளங்களில் பல கருத்துகளைக் கேட்கிறோம். சிலருக்குச் சில சொற்கள் பிடித்துள்ளன, ஆனால் வேறு சில சொற்கள் பிடிக்கவில்லை, இவற்றை இன்னும் எளிமையாக, எல்லாருக்கும் புரியும்வண்ணம் மாற்றலாமே என்று கருதுகிறார்கள்.
இதுபோன்ற கருத்துகளை ஒரே இடத்தில் தொகுக்கலாம் என்ற எண்ணத்தில் இந்தப் பதிவை எழுதுகிறோம்.
”எழில்” மொழியில் உள்ள சொற்களின் பட்டியல் (உரிய ஆங்கிலச் சொல்லுடன் சேர்த்து) கீழே தரப்பட்டுள்ளது. அதுபற்றிய உங்கள் கருத்துகளை அறிய விழைகிறோம்.
ஒவ்வொரு சொல்லுக்கும் ‘நன்றாக உள்ளது’, ‘நன்றாக இல்லை’, ‘இதை இப்படி மாற்றலாமே’ என்ற மூன்று வாய்ப்புகள் தரப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். நீங்கள் வேறு நல்ல சொல் என்று நினைப்பவற்றைப் பரிந்துரை செய்யுங்கள். (உங்களிடம் தமிழ் தட்டச்சு வசதி இல்லாவிட்டாலும் பரவாயில்லை, நீங்கள் ஆங்கில எழுத்துகளிலேயே மாற்றுச் சொற்களைப் பரிந்துரைக்கலாம்)
இப்படிச் சேகரிக்கப்படும் மாற்றுச் சொற்களைத் தொகுத்து, பெரும்பான்மை மக்களின் கருத்து, “எழில்” உருவாக்கக் குழுவின் சிந்தனைகள் அடிப்படையில் வேண்டிய மாற்றங்களைத் தீர்மானிப்போம்.
உங்கள் கருத்துகளுக்கும் உதவிக்கும் மிக்க நன்றி. “எழில்” மொழிக்கு இன்னும் எழில் கூட்டுவோம்!
இந்த வாக்கெடுப்பில் பங்கேற்பதற்கான இணைய முகவரி: http://www.surveymonkey.com/s/BPRBRDS
வணக்கம். முதலில், ‘எழில்’ என்ற தமிழ் மொழியில் அமைந்த நிரலாக்க மொழியை அமைக்க தாங்கள் எடுத்துள்ள முயற்சியை பாராட்டுகிறேன். அது தொடர்ந்து முன்னேற வாழ்த்தவும் செய்கிறேன். தமிழ்வழி கற்கும் மாணவர்கள் நிரலாக்க மொழியொன்றைக் கற்பதற்கு அவர்களது குறைந்த ஆங்கிலப் புலமை தடையாக இருக்கிறது என்ற கருத்து இருக்கிறது. அதே வேளையில், சி++, சி, சி#, ஜாவா, ஒப்ஜெக்ட் சி, ரூபி, பைத்தான் போன்ற மொழிகளை நன்விதத்தில் போதிக்கும் தமிழ் நூல்களும் தமிழ் பாடதிட்டங்களும் உருவாக்கப்பட்டால், அச்சிக்கல் தீரும் அல்லவா? அல்லது, எந்நூலும் தீர்க்க முடியாதச் சிக்கலை நம் மாணவர்கள் எதிர் நோக்குகின்றனரா? இக்கேள்விகளை உங்கள் சிந்தனைக்கு வைக்கிறேன், அவ்வளவுதான். அவற்றிற்கான பதில் என்னிடம் கிடையாது.
இரண்டாவதாக, சற்று முன்னர் ‘சர்வே மங்கீ’ தளத்தில் நீங்கள் அமைத்துள்ள திரவுச்சொற்களுக்கு (keywords) எனது பரிந்துரைகளை அளித்தேன். நீங்கள் அளித்திருந்த சொற்களில் வெகு சில சொற்களே எனக்கு ஏற்புடையதாகப் பட்டன.
கருத்திற்கு நன்றி.
1. நல்ல நொக்கம். தமிழ் கைடு-புத்தகம் எழுத எங்களுக்கு தற்பொது எண்ணம் கிடையாது.
2. இப்போது எழில், இதன் குறிச்சொற்கள் என்பது எங்கள் கருத்தில் பயணுள்ள சரியாக உள்ளது. உங்களுக்கு வேறுபாடே மற்ற வகையில் நல்ல சிந்தனை இருந்தால் நீங்கள் அதை பற்றி புளாக செய்யலாம் அல்ல மற்றொறு எழீல் “fork” on github செய்யலாம்.
நாங்கள் எழுதிய 3 blog-post வாசிக்கவும் -https://ezhillang.wordpress.com/2013/09/14/ezhil_keywords_poll/