எந்த மொழியிலும் கணினி நிரல்களை எழுதுவதற்குச் சில அடிப்படைச் சொற்களை (keywords) நன்கு கற்பது அவசியம். ஆரம்ப நிலையில் அவை சுமார் பத்து முதல் இருபது சொற்களாகதான் இருக்கும்.
இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, தமிழ்மட்டுமே அறிந்த ஒரு மாணவர் இவற்றுள் எதை விரும்புவார்?
- ஆங்கிலத்தில் ஏற்கெனவே நன்கு பரவலாகியுள்ள நிரல் மொழியைத் தமிழில் கற்றுக்கொண்டு, ஆங்கிலத்தில் நிரல்கள் எழுதுவது, இதற்காக அவர் ஆரம்பத்தில் சில ஆங்கிலச் சொற்களை மனப்பாடம்கூடச் செய்யவேண்டியிருக்கலாம், ஆனால் பின்னர் பிற நிரல் மொழிகளுக்குச் செல்லும்போது இந்தப் பயிற்சி அவருக்கு உதவும்
- ”எழில்” போன்ற தமிழ் நிரல் மொழி ஒன்றைக் கற்றுக்கொண்டு தமிழிலேயே நிரல்கள் எழுதுவது, இதில் அவர் அந்த மொழியை நன்கு உணர்ந்து பின்பற்றுவார் என நம்பலாம். பின்னர் அவர் பிற (ஆங்கில) நிரல் மொழிகளுக்குச் செல்லும்போது ஒரு மாற்றத்துக்குத் தயாராகவேண்டியிருக்கும் (மொழிபெயர்ப்புபோல)
இவ்விரு மொழிகளும் அறிந்தவர்கள் இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்? நம்முடைய முயற்சிகள் எந்தத் திசையில் இருக்கவேண்டும்?
Second seems more plausible!