எழில் மொழியில் பயன்படும் முக்கியமான சொற்களைப்பற்றிய உங்கள் கருத்துகளைக் கேட்டிருந்தோம். இந்தக் கணக்கெடுப்பில் ஆர்வத்துடன் பங்கேற்ற அனைவருக்கும் எங்கள் நன்றிகள்.
இந்த வாக்குகளின் அடிப்படையில் பார்க்கிறபோது, சில விஷயங்கள் தெளிவாகப் புரிகின்றன:
- தற்போதுள்ள “எழில்” மொழிச் சொற்கள் பெரும்பாலும் சரியாகவே அமைந்திருப்பதாக மக்கள் கருதுகிறார்கள்
- நாம் தந்திருந்த பதினாறு சொற்களில், இரண்டைத் தவிர மீதமுள்ள அனைத்தும் பெருவாரியான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன, மீதமுள்ள அந்த இரண்டிலும்கூட, ’சரி’க்கும் ‘வேண்டாம்’க்கும் இடையே ஒரு கை விரல்களால் எண்ணும் அளவிலான வாக்கு வித்தியாசம்தான்
- சில சொற்களுக்கு மாற்றுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை எல்லாம் ஒருமித்த கருத்துகளாக அமையவில்லை
- தமிழ் வார்த்தை வளம் மிகுந்த ஒரு மொழி. இதற்குப் பதில் இன்னொன்று என்று பல சொற்களை நாம் சுட்டிக்காட்டமுடியும். ஆகவே, இதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை, இது தவறு, அது சரி என்பதற்கு வலுவான ஒரு காரணம் உள்ளதா என்பதைதான் கவனிக்கவேண்டும்
அதற்குமுன்னால், நாம் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பார்த்துவிடலாம். அதன்பிறகு, இதுபற்றி “எழில்” மொழியை உருவாக்கியுள்ள திரு. முத்தையா அண்ணாமலை அவர்களின் கருத்துகளைக் கேட்கலாம்.
தரப்பட்ட பதினாறு சொற்களில், மிக அதிக எண்ணிக்கையில் மக்களுடைய ஒப்புதலைப் பெற்ற சொற்கள் இவை:
- செய் : Do (96%)
- தொடர் : Continue (90%)
- நிறுத்து : Break (90%)
- தேர்ந்தெடு : Select (90%)
- தேர்வு : Case (90%)
- ஏதெனில் : Otherwise (90%)
- முடி : End (84%)
- ஆக : For (79%)
- வரை : While (79%)
- ஆனால் : If (71%)
- இல்லைஆனால் : Else If (71%)
- இல்லை : Else (71%)
- பதிப்பி : Print (66%)
- நிரல்பாகம் : Function (60%)
- பின்கொடு : Return (48%)
- முடியேனில் : Until (45%)
அடுத்து, ”எழில்” மொழியில் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டுவரும் இந்தச் சொற்களுக்கு மாற்றாக மக்கள் சொன்ன சுவையான யோசனைகளைத் தொகுத்துப் பார்க்கலாம்.
(தொடரும்)
One thought on “உங்கள் கருத்துகள்: 1”