”எழில்” தமிழ் நிரல் மொழியைப் பற்றிய நமது அறிமுகப் பதிவுகளை பார்த்த நண்பர் ஒருவர் இப்படிக் கேட்டிருந்தார்:
நான் தற்போது OOP (Object Oriented Programming) கற்கும் முயற்சியில் இருக்கிறேன். “எழில்” அதற்கு உதவுமா?”
இது ஓர் அருமையான கேள்வி, சரியானபடி செயல்படுத்தினால் தமிழில் OOP என்பது மிக நல்ல முயற்சியாகவே இருக்கும்.
ஆனால் அதேசமயம், OOP என்பது புதிதாக நிரல் எழுதுகிறவர்கள், கற்றுக்கொள்கிறவர்களுக்கு ஏற்றது அல்ல, அந்த அளவு எளிமையானதும் அல்ல. சில அடிப்படைப் பயிற்சிகள் OOPயில் நேரடியாகத் தொடங்கினாலும், அது பரவலாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
”எழில்” குழுவின் நோக்கம் புதியவர்களைமட்டுமே மையமாகக் கொண்டிருப்பதால், தற்போது இதற்கான வாய்ப்பு இல்லை. ”எழில்” நிரல் மொழியின் அடிப்படை வசதிகள் அனைத்தும் சிறப்பாக அமைந்தபின்னர் நிச்சயமாக இதனைச் செய்யலாம்.
அதுவரை, (ஆங்கில வழியில்) OOP கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு நாங்கள் சிபாரிசு செய்பவை:
- Standard Python language tutorial @ http://docs.python.org/2/tutorial/
- Book: “A Byte of Python” (இது ஓர் இலவச நூல், ஆர்வமுள்ளவர்கள் அனுமதி பெற்று இதனைத் தமிழில் மொழிபெயர்க்கலாமே!)
இவை உங்களுக்குப் பயன்படும் என நம்புகிறோம். நன்றி!