சென்ற பாகத்தில் “எழில்” மொழியின் முக்கியச் சொற்களைப்பற்றிய மக்களின் வரவேற்பு சதவிகிதத்தைப் பார்த்தோம். இப்போது, அவற்றுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றுச் சொற்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.
நாம் ஏற்கெனவே பார்த்தபடி, எல்லாரும் ஒரேமாதிரியான மாற்றுச் சொற்களைத் தரவில்லை. வந்தவற்றுள் சிறப்பாக இருந்த சிலவற்றைமட்டும் இங்கே குறிப்பிடுகிறோம். இவை “எழில்”க்கோ, வருங்காலத்தில் உருவாகக்கூடிய மற்ற தமிழ் நிரல் மொழிகளுக்கோ பயன்படக்கூடும் என்பது எங்கள் எண்ணம்.
முதலில் Print. இதற்கு இப்போது உள்ள சொல் ‘பதிப்பி’. பரிந்துரைக்கப்பட்டுள்ள பிரபலமான மாற்றுச் சொற்கள்:
- அச்சிடு
- அச்சடி
- வெளியிடு
அடுத்து, Return, இதற்கு இப்போது உள்ள சொல் ‘பின்கொடு’. பரிந்துரைக்கப்பட்டுள்ள பிரபலமான மாற்றுச் சொற்கள்:
- திருப்பு
- பதில்கொடு
- கொடு
மூன்றாவதாக, If / ElseIf / Else. இவற்றுக்கு இப்போது உள்ள சொற்கள், ‘ஆனால்’, ‘இல்லைஆனால்’ மற்றும் ‘இல்லை’. பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றுச் சொற்கள்:
- ஒருவேளை, அல்லது
- என்றால் / எனில்
- இருந்தால், இல்லாவிடில், இல்லையென்றால்
நான்காவதாக, For. இதற்கு இப்போது உள்ள சொல் ‘ஆக’. பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றுச் சொற்கள்:
- ஒவ்வொரு
- இவ்வாறாக
- முதல்… வரை
ஐந்தாவதாக, Do. இதற்கு இப்போது உள்ள சொல் ‘செய்’. இதற்கு மாற்றாக எந்தக் குறிப்பிடத்தக்க சொல்லும் பரிந்துரைக்கப்படவில்லை.
ஆறாவதாக, While. இதற்கு இப்போது உள்ள சொல் ‘வரை’. பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றுச் சொற்கள்:
- அதுவரை
- போது
- அப்பொழுது / அதேவேளை
ஏழாவதாக, Until. இதற்கு இப்போது உள்ள சொல் ‘முடியேனில்’. பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றுச் சொற்கள்:
- அதுவரை / அதுகாறும் / இதுவரை / இதுகாறும்
- வரை
- முடியும்வரை
- மட்டும்
எட்டாவதாக, Function. இதற்கு இப்போது உள்ள சொல் ‘நிரல்பாகம்’. பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றுச் சொற்கள்:
- நிரல்துணுக்கு
- செயல்பாடு
- செயல்கொத்து / செயற்கூறு / செயல்நிரல் / பணித்துண்டு
- வேலை
ஒன்பதாவதாக, End. இதற்கு இப்போது உள்ள சொல் ‘முடி’. பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றுச் சொற்கள்:
- நிறை
- சுபம்
- நிறுத்துக
நிறைவாக, Continue, Break, Select, Case, Otherwise. இவற்றுக்கு இப்போது உள்ள சொற்கள், ‘தொடர்’, ‘நிறுத்து’, ‘தேர்ந்தெடு’, ‘தேர்வு’, ‘ஏதேனில்’. பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றுச் சொற்கள்:
- தொடர்க
- நிறுத்துக / இடைநிறுத்து / தடை செய் / வெட்டு
- தேர்ந்தெடுக்க
- தெரிவு
- இல்லையெனில் / வேறாயின் / மாறாக
இந்த மாற்றுச் சொற்கள் அனைத்தும் சுவாரஸ்யமானவைதான். ஆனால் என்னுடைய தனிப்பட்ட கணிப்பில் இவற்றில் எவையும் உறுதியாக மாற்றியே தீரவேண்டும் என்கிற அளவுக்கு மிக வலுவான(compelling)வையாக இல்லை.
என்னுடைய கருத்து இருக்கட்டும், ”எழில்” மொழியை உருவாக்கியுள்ள திரு. முத்தையா அண்ணாமலைதான் தற்போது புழக்கத்தில் உள்ள “எழில்” சொற்களைத் தேர்வு செய்தவர். அவர் இந்த மாற்றுச் சொற்களைப்பற்றி என்ன நினைக்கிறார்?
(தொடரும்)