வணக்கம் நண்பர்களே,
தமிழ் இணையம் வழி சொல் திருத்தி: வானி http://vaani.neechalkaran.com இன்று ஒரு வேளியாகியது. நண்பருக்கு வாழ்த்துக்கள்.
தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்
எழில் : தமிழ் நிரலாக்க மொழி (Ezhil Language Blog) [opinions are my own]
வணக்கம் நண்பர்களே,
தமிழ் இணையம் வழி சொல் திருத்தி: வானி http://vaani.neechalkaran.com இன்று ஒரு வேளியாகியது. நண்பருக்கு வாழ்த்துக்கள்.
இரண்டு அல்லது அதற்கு மேற்ப்பட்ட மொழிகள் முதன்மையாக பயன்படும் சமுதாயங்களைப் பன்மொழி சமூகம் என்கிறோம். உலகின்அனேக நாடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் வழக்கில் இருக்கின்றன. எ.கா இந்தியா, இலங்கை, கனடா, சிங்கப்பூர் இன்றைய உலகமயமாதல் காலகட்டத்தில் பன்மொழிச் சமூக கட்டமைப்பை ஏதுவாக்கி பேணுவது சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு அவசியமாகின்றது. இதே போன்று ஒன்றுக்கும் மேற்ப்பட்ட மொழிகள் பேசும் சூழலில் வாழ்கின்ற பழங்குடி மக்களிடமும் பன்மொழிப் பயன்பாடு என்பது மிகுதியாகக் காணப்படுகிறது. பழங்குடி மக்கள் பல மொழிகளைக் கற்றுக் கொள்வதற்கு முதல் காரணம் சமுதாயத்தில் வாழ்வதற்கும், தங்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையானப் பொருள்களை வாங்குவதற்க்கும், அவர்கள் பல மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
பழங்குடி மக்களின் தாய் மொழியை மற்ற சமுதாய மக்கள் அறியாத காரணத்தால் இவர்களின் சமுதாயத் தேவைகளை பூர்த்திசெய்து கொள்ள இவர்கள் மற்ற மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்ப்படுகின்றது. பன்மொழிச் சூழலில் வாழ்கின்ற நீலகிரி மாவட்ட காட்டுநாயக்கன் பழங்குடி மக்களின் மொழிகளிலும் பன்மொழிப் பயன்பாடுக் காணப்படுகின்றது. தற்காலத்தில் அதிகமாக எல்லா