நேரம் படிக்கும் கெடியாரம் ஒன்றை எப்படி உருவாக்கலாம்?
Speaking Clock
முதலில் இது என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானம் செய்யலாம்.
- நேரம் சரியாக காட்ட வேண்டும்
- நேரம் எண்களை சொற்களாக மாற்றனும்
- நேரம் சரியாக படிக்க வேண்டும்
இதில் முதல் தேவையை கணினி இயங்குதளமே (OS) பூர்த்தி செய்யும். பைத்தான் (Python language) மொழியில் கீழ்கண்டவாரு எழுதினால் தற்பொதைய நேரம், மட்டும் தேதி கிடைக்கும்.
import datetime, time
time_as_string = time.ctime()
# access only the date
today = datetime.date.today()
dnt_now = datetime.datetime.now()
# access hour, minute, second and microsecond fields
dnt_now.hour, dnt_now.minute, dnt_now.second, dnt_now.microsecond
முதல் வேலை சரியாக முடிந்தது.
இப்போது, ஓப்பன் தமிழ் நிரல் தொகுப்பில் தசம எண்களின் வார்த்தைவடிவாக சொல்கிரது எ.கா. 1001.45 -> ‘ஓர் ஆயிரத்தி ஒன்று புள்ளி நான்கு ஐந்து’. பைத்தான் (Python language) மொழியில் கீழ்கண்டவாரு எழுதினால்
import tamil
actual_IN2 = tamil.numeral.num2tamilstr(1001.45)
#gives -> ஓர் ஆயிரத்தி ஒன்று புள்ளி நான்கு ஐந்து
இப்போது கீழே உள்ள அனைத்து சொற்களுக்கும் ஒலி வடிவில் தயார் செய்ய வேண்டும்.
- units = (u’பூஜ்ஜியம்’, u’ஒன்று’, u’இரண்டு’, u’மூன்று’, u’நான்கு’, u’ஐந்து’, u’ஆறு’, u’ஏழு’, u’எட்டு’, u’ஒன்பது’, u’பத்து’) # 0-10
- teens = (u’பதினொன்று’, u’ பனிரண்டு’, u’பதிமூன்று’, u’பதினான்கு’, u’பதினைந்து’,u’பதினாறு’, u’பதினேழு’, u’பதினெட்டு’, u’பத்தொன்பது’) # 11-19
- tens = (u’பத்து’, u’இருபது’, u’முப்பது’, u’நாற்பது’, u’ஐம்பது’,u’அறுபது’, u’எழுபது’, u’எண்பது’, u’தொன்னூறு’) # 10-90
- tens_suffix = (u’இருபத்தி’, u’முப்பத்தி’, u’நாற்பத்தி’, u’ஐம்பத்தி’, u’அறுபத்தி’, u’எழுபத்தி’, u’எண்பத்தி’, u’தொன்னூற்றி’) # 10+-90+
- hundreds = ( u’நூறு’, u’இருநூறு’, u’முன்னூறு’, u’நாநூறு’,u’ஐநூறு’, u’அறுநூறு’, u’எழுநூறு’, u’எண்ணூறு’, u’தொள்ளாயிரம்’) #100 – 900
- hundreds_suffix = (u’நூற்றி’, u’இருநூற்றி’, u’முன்னூற்று’, u’நாநூற்று’, u’ஐநூற்று’, u’அறுநூற்று’, u’எழுநூற்று’, u’எண்ணூற்று’,u’தொள்ளாயிரத்து’) #100+ – 900+
- one_thousand_prefix = u’ஓர்’
- thousands = (u’ஆயிரம்’,u’ஆயிரத்தி’)
- one_prefix = u’ஒரு’
- lakh = (u’இலட்சம்’,u’இலட்சத்தி’)
- crore = (u’கோடி’,u’கோடியே’)
இதை எனக்கு யாரேனும் எனக்கு ரெக்காட் செய்து தந்தால் மகிழ்ச்சி. ஓப்பன்-தமிழ் கிட்ஹப் வழி அனுகவும்.
இப்போது பைத்தான் வழி கிடைத்த தேதி, நேரம் தகவல்களை நாம் ஓப்பன் தமிழ் வழியாக சொற்களாக மாற்றலாம். பின்னர் இவற்றின் (சொற்களை) ஒலி கொப்புகளை சேர்த்தால் இதுவே “பேசும் கேடியாரம்” ஆகும்.