06/13/2015
2014 தமிழ் கணிமை விருது – ஏற்புரை
இடம்: தமிழ் இலக்கிய தோட்டம் ஆண்டு விழா, டோரான்டோ, கனடா
அரங்கத்தில் உள்ள அணைவருக்கும் வணக்கம். 2014-ஆம் ஆண்டு தமிழ் கணிமைக்கான விருதை த.இ.தொ/காலச்சுவடு அறக்கட்டளையின் பார்வையில் பெறுவது மிகுந்த மகிழ்ச்சி.

எழில் என்பது ஒரு நிரலாக்கல் மொழி (programming language). பெரும்பாலான நிரலாக்கல் மொழிகள் ஆங்கிலத்தில் தான் உள்ளன; தமிழில் கணிமையின் கட்டமைப்புகளை கையாண்டு சிலர் முயன்ற போதிலும், எழில் மொழி மற்றும் தனித்துவம் வாய்ந்து அமைந்துள்ளது. ஏனெனில் எழில் மொழி மற்றுமே கட்டளைகளை தமிழ் மொழி போன்ற சொற்றொடரியல் இலக்கணத்தை கொண்டது. இம்மொழியின் சிறப்பு அம்சம் –
- எழில் மொழி திற மூல மென்பொருள்; இணையம் வழி கற்றிடலாம்; மற்றும்
- இதனை கற்பதற்கு “தமிழில் நிரல் எழுது” என்ற துணை கையேடும் வெளியிடப்பட்டுள்ளது.
- கணிமை மூதாதையர் அலன் டியூரிங் அவரின் வழி “டியூரிங் வரையறைக்குள் முழுமையாக” (Turing complete) உள்ளது.
தமிழ் அறிந்த சிறுவர்கள் தமிழினால் கணிமை துரையில் பின்தங்கியதாக இருக்க வேண்டாம். அந்த நிரலாக்கல் திறன் இன்று எழில் வழியாகவும் ஆங்கிலம் சாரததாக உள்ளது. கலை சொற்கள் இருப்பின் தமிழில் முதன்மையாக நிரல் எழுத வசதியில்லை. 2007-இல் தோற்றம் எடுத்தாலும், எனது முதுநிலை படிப்பின் காரணமாக 2009 முதல்- 2012 வரை ஆண்டுகள் அதிகம் மேம்படுத்தப்படாமல் இருந்தது. திரும்ப 2013-முதல் இந்த திட்டம் மறுபிறப்பேடுத்து இணையம் வழி வழங்கப்பட்டது.
மொழி என்பதனால் தகவல் தொழில்நுட்பம் என்ற ஒரு கதவு திரக்கும் அளவு ஒரு பரிமாண வளர்ச்சியை எட்ட வேண்டும். தமிழில் மென்பொருள் எழுதுவதும், செயலியை உருவாக்குவதும் ஏன் குறைவாக உள்ளது? சில காரணங்களை சுட்டிக்காட்டலாம்.
- ஆங்கிலத்தில் இல்லாத சில நிரலாக்க மொழி சார்ந்த, குறியீடு சார்ந்த சிக்கல்கள்.
- சிறிய சந்தை அளவினாலும், இலாபம் குறைவாக இருப்பதால் பலர் தமிழில் பங்களிப்பதையோ, உருவாக்குவதையோ வெறும் வணிகரீதியில் பார்க்கின்றனர்.
- மேலும் கூறினால் தொழில் நுட்பத்தில் முதலீடு செய்யவும் இலாபம்
பார்ககும் வரை தாக்குப்பிடிக்க பண வசதி செய்ய யாரும் இல்லை. - அரசாங்கத்தின் டேன்டர் பெறுவசம் சார்ந்த தனியார் நிறுவனங்கள் மட்டும் உள்ளன.
- நாம் எப்படி அடுத்த கட்ட இளைஞரை தமிழ் பொறியியலில் தயார் செய்யலாம்?
இந்த கேள்விகளுக்கு விடையில்லாட்டியும், நல்ல முடிவு நிச்சயம் இருக்கு.
புலம்பெயர்ந்த தமிழர்களும், தமிழ் சமூகமும் தகவல் தொழில்நுட்பத்துறையில் தமிழ் வளர ஆதரவளிக்க வேண்டும். INFITT, த.இ.தோ (TLG) போன்ற அறக்கட்டளைகள் இதை தொடர்ந்து சிறப்பாக செய்யலாம்.
சிலோன் பெயர் கொடுத்த ஆங்கில சொல் ‘serendip’ – ‘serendipity’ – என்று தேடாத அதிர்ஷ்டமாய் வந்த த.இ.தோ அழைப்பு மற்றும் விருது என் வாழ்வில் ஒரு மையில் கல் ஆக அமைந்தது.
விருது விழாவில் கலந்து கொள்வதற்கு வழிகாட்டிய திரு. Tamil Literary Garden award ceremonyமுத்துலிங்கம் ஜயாவிற்கு, திரு. வெங்கட் அவருக்கும் நன்றி கூறுகிறேன். அஸ்டிரேலிய தமிழர் SBS Radio-வின் குலசேகரம் சஞ்சயன் அவரின் நுட்பமான வானொலி நேர்காணலிற்கும், தி இந்து பத்திரிகையாளர் கார்திக் அவருக்கும், எழில் மொழியினை பற்றிய செய்தியை பலர் அறியுமாறு செய்தமைக்கு நன்றி.
வழி முழுவதும் ஊக்குவித்த தாய்-தந்தையிற்கும், தம்பியிற்கும், நன்றி. டொறான்டொ வரை அழைத்து வந்த வாய்ப்புகளை ஏற்று செயல்பட ஊக்கம் அளித்த மனைவி சாலாவிற்கு நன்றி.
எழில் அமெரிக்காவில் தோற்றம் எடுத்ததால், அந்நாட்டின் மேல் கொண்ட நம்பிக்கையினாலும் அங்கு கிடைத்த வாழ்விற்கு நன்றி. எழில் மொழி பங்களிப்பாளர்களுக்கும், எழுத்தாளர் என். சொக்கன் அவருக்கும் நன்றி.
அலன் டியூரிங், பிரிட்டன் அடிமைப்படுத்திய இந்தியாவில் பிறந்தார்; இன்று அவர் கனவு கண்ட கணினி பல மொழிகள் பேசும். தமிழும் கூட!
நன்றி. வணக்கம்!
– முத்து அண்ணாமலை
அடிக்குறிப்பு : அளித்த உரையின் சற்றே விரிவான கட்டுரை
Reblogged this on தமிழ் கணிப்பொறி உலகம்.