தமிழில் நிரைய வகையான சொற்கள் இன்று புழக்கத்தில் உள்ளன. அதில் திசை சொற்கள், வட்டார மொழி, செந்தமிழ், கடுந்தமிழ் என பலவகையான விதங்களில் கட்டமைக்கப்பட்டலாம்.
கணினி துரை சார்ந்த அளவில் ஆங்கிலம் முதன்மையாக கொண்டு ஆராய்சி நடத்தியும், அதன் தொழில்நுட்பங்களை மென்பொருள் சந்தைகளில் பெரும்பாலும் ஆங்கிலம் சார்ந்த வாடிக்கையாளர்களிடம் தான் விற்கின்றனர்.
தமிழில் இந்த மாதிரியான தொழில்நுட்பங்களை பயன்படுத்த நமக்கு சற்றே புதிய சொற்கள் தேவைப்படுகின்றன. இதை அறிந்த நாம் தமிழர் வேர் சொற்கள் பயன் படுத்தி உருவாக்க முடியும்.
இந்த மாதிரி உருவாக்கிய தமிழ் இனங்கு சொற்கள் கீழ் காணலாம்.
- Pay wall – சுங்கசுவார்
- Fire wall – அகழ்வுசுவர்
- Hackathon – தொடர் நிரலாக்கம்
- Hacker – கணிமேதை, கணினி மேதாவி
- Back seat coder – ஒப்புநிரலாளர்
- Cracking – மென்பொருள் வழிப்பறி
- Evaluate – கணித்திடு, கணி, கணக்கிடு
- Import – இணை, சேர், பயன்படுத்து
இந்த சொற்கள் இட்விட்டரில் அருண்ராம், சோபின் பிராண்சில் மற்றும் சூரஜ் அவர்களுடன் கலந்துரையாடி தேர்ந்தேடுக்கப்பட்ட சொற்கள்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்? விவாதிக்க.
நன்றி
-முத்து
Reblogged this on தமிழ் கணிப்பொறி உலகம்.