கீழ்கண்ட எழில் உதாரணங்கள் (எ.கா) ஏதேனும், எதனையும் உங்களால் பங்களிக்க முடியுமா?
உங்களால் முடிந்தவரை Github தளத்தில் pull -request அனுப்பவும். இல்லாத பட்சத்தில் நேரடியாக ezhillang என்ற ஜிமெயில் அஞ்சலுக்கு உங்கள் படைப்புக்களை அனுப்புக.
- நாள் தேதி எ.கா – பிறந்த நாளை உள்கொண்டு
- வயதை இந்நாள் வரை கணக்கிடும்
- ஒரு கழுதை வயசு 8 ஆண்டுகள் எனில் வயசு என்ன?
- எத்தினை நாட்கள் வசித்து வந்தனர்? லீப் ஆண்டுகள் கவணம்
- முனை-ஓரம் (கிராப்) வரைபடம் வடிவமைத்து கீழே உள்ள வினாவிற்கு விடையளிக்க – தமிழ் திரையுலக கலாச்சாரம் சார்ந்த எ.கா. ஏதேனும் ஒரு நடிகர்/கை:
1. ஒரு குறிப்பிட்ட படத்தில் உள்ளனரா ?
2. இவர் மற்றவர் ஒருவருடன் எத்தனை படங்களில் இடம் பெற்றார் ? - எழில் அடுக்கு செயல்கூறுளுக்கு எ.கா நிரல் எழுதுக – கீழே உள்ள வினாவிற்கு விடை எழில் வழி அளிக்க
1. பெருக்கல்
2. கூட்டல்
3. கழித்தல்
4. அடுக்கு பெருக்கு - தொலைபேசி விலாசம் புத்தகத்தை எழில் எ.கா. வடிவமைக்க 1. தொடர்புகளை சேர், 2. தொடர்புகளை நீக்கு,
3. தொடர்புகளை தேடு
நன்றி
-முத்து