மாதம்: ஜனவரி 2016
எழில் மொழி எண் 0.8 வெளியீடு
எழில் மொழியின் அடுத்த அத்யாயம் இன்று வெளியிடப்பட்டது - எண் 0.8 : இதனை Python Package index வழியாக பெறலாம்; (நீங்கள் ஏற்கனவே python நிறுவி இருக்க வேண்டும்) $ pip install --upgrade ezhil குறிப்பாக: 1. அணிகள் (arrays) 2. Profiling 3. பிழை தகவல்கள் மேம்பாடு 4. Python 3 தளத்தின் உபயோகம் 5. உரிலி பயன்பாடு 6. பல வழுக்களை நீக்கல் போன்ற பல அம்சங்களை கொண்டதாக இந்த வெளியீடு அமைந்தது. நன்றி, முத்து பாஸ்டன்
மூளை குழம்பி மொழி இயக்கி வடிவமைப்பது எப்படி?
மூளை குழம்பி மொழி இயக்கியை எழில் மொழியில் வடிவமைப்பது எப்படி? இந்த கேள்வி வெகு சுவாரசியமானது – அதாவது கணிமை முழுவதும் ஒரு யெந்திரதின் பணியில் கணிக்கப்படுவது. இதை நான் ஒரு எழில் மொழியில் வடிவமைத்ததை பற்றி இங்கு எழுதுகிறேன்.
மூல நிரலுக்கு இங்கு github-இல் பார்க்கவும்.
இந்த மூளை குழம்பி மொழியில் உள்ள செயலுறுபுகள் என்ன ?

செயலுறுபு – (Operators) –
- ‘>’, ‘<‘ – செயலுறுபு நினைவகத்தை குறிக்கும் இடத்தை முன் அல்லது பின் அளவில் மாற்றும்
- ‘+’, ‘-‘ – செயலுறுபு நினைவகத்தின் மதிப்பை கூட்டும் அல்லது குரைக்கும்
- ‘[‘, ‘]’ – செயலுறுபு நிரலின்இயக்கம் பகுதியி அடுத்த அடைவுகுரிப்பிபிற்கு ‘]’, அல்லது ‘[‘ இற்கு தாவும் படி குறிக்கும்
- ‘,’,’.’ – என்ற செயலுறுபு உள்ளிடு, வெளியீடு, குறிக்கும்
முக்கியமான மைய்யகணினி இயக்கியின் பண்பு
நாம் வடிவமைக்கும் இயக்கியில் ப்ரோக்ராம் (நிரலின்) நினைவகம் மாற்றும் தரவுகளின் நினைவகமும் வெவ்வேறு இடங்களில் இருக்கு. இதனை கொண்டு, மடக்கு கட்டளைகளான ‘[‘, ‘]’ என்ற குறிப்புகளை ஒரு ஸ்டாக் (அடுக்கு) என்பதில் கொண்டு நாம் ஒரு சறியன இயக்கியை உருவாக்கலாம்.
இப்போது இந்த மைய்யகநினியில், மூளை குழம்பி மொழியில் எப்படி எண்களை கூட்டுவது ?
இரண்டு எண்களை கூட்டுவது
program_sum = “++>+++++.<[>+<-].” #sum of 2+5 in cell #2
“Hello World” நிரல் எழுதுவது
program_hello_world = “++++++++[>++++[>++>+++>+++>+<<<<-]>+>+>->>+[<]<-]>>.>—.+++++++..+++.>>.<-.<.+++.——.——–.”
# Ref: https://en.wikipedia.org/wiki/Brainfuck#Hello_World.21
இதன் இயக்கியை நாம் எழில் நிரலாக இங்கு படிக்கலாம்!