இந்த ஆண்டு எனக்கு எழில் மொழியில் சில இலக்குகள் உள்ளன,
0. வலை தளத்தை சுலபமாக மேம்படுத்துவது
– தற்போது உள்ள நிலையில் 3-முறை அல்லது 4-முறை AJAX request அனுப்பினால் மட்டுமே ezhillang.org/koodam/play/ விடையளிக்கிறது; தற்போது Chrome வலைஉலவி-யில் இது செயல்படுத்த வராது; மேலும் Django request-இல் 10 வினாடிகளுக்கு மேல் எதையும் செய்யமுடியாமல் தற்போது தாமதமாக செயல்படுகிறது.
1. எழில் மொழி Parser-ஐ மேம்பாடு செய்வது
2. Windows package உருவாக்குவது
3. Linux .deb மற்றும் rpm package உருவாக்குவது
4. தமிழ் மொழியில் பிழை தகவல்களை வெளியிடுவது
(gettext போன்ற ஒரு அமைப்பை நான் இப்போது செய்து வருகிறேன்)
5. Ezhil மொழியிற்கு ஒரு IDE (PyGTK வழி, Eclipse-plugin) வழிகளில் முயற்சிகள்
இந்த இலக்குகளை உங்களுடனும், எனது மீதி நேரங்களிலும் செயல்படுத்தும் ஆர்வம் கொண்டவர்கள் ezhillang@gmail.com என்ற முகவரியில் மின் அஞ்சல் அனுப்பலாம். github தளத்திலும் தொடர்பு கொள்ளுங்கள்
நன்றி
முத்து,
பனியால் சூழ்ந்த பாஸ்டன்
One thought on “2016-ஆம் ஆண்டுக்காண இலக்கு”