ஒரு புது திட்டம் என்றால், எழில் போன்ற மொழிகளுக்கு, மற்ற சுற்று சூழலில் உள்ள மென்பொருள்களுக்கு நம்மை பற்றி சொல்லி கொடுக்க வேண்டும் என்ற ‘burden of proof’ பொறுப்பு நம்முடன் உள்ளது. எழில் மொழியில், Java, Python, என்பதில் போலவே எப்படி IDE, Syntax Highlighting கொண்டு வருவது ?
முதல் கட்டமாக Pygments என்கிற Python மொழியில் எழுதிய Syntax Highlighter என்ற திட்டத்தில் எழில் மொழியின் தொடரியலை / இலக்கணத்தை புரிந்து கொள்ளும் வகையில் செயல்பட்டோம். இதன் விளைவு இன்று எழில் மொழி Pygments என்ற திட்டத்தில் சேர்க்கபட்டது http://pygments.org/languages/ . முக்கியமாக நீங்கள் Pygments கொண்டு உங்கள் செயலியில் எழில் மொழியில் எழுதிய நிரல்களை உடனடியாக வண்ணம் குறியீடுகளுடன் வெளியீடு காட்டலாம்.
மேலும் ACE என்கிற வலை உலாவி (browser) வழி திருத்தியில் எழில் மொழியை செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள பட்டது. இதன் விளைவாக http://ezhillang.org/koodam/play/ எழில் தளத்தில் நீங்கள் வண்ணகளுடன் உதவும் திருத்தியில் எழில் நிரல்களை இயக்கலாம்.

தனி மரம் என்றுமே தோப்பாகாது!