ஓபன் தமிழ் வழியில் உருவாக்கிய சொல்திருத்தி ஒன்றை பற்றி சில வாரங்களுக்கு முன்பு இங்கு எழுதினேன். இன்று, இன்று காலை கிடைக்கும் நேரத்தில் இதனை TinyMCE என்ற இணைய திருத்தியுடன் இணைந்து செயல்படுத்தினேன்.
இது கொஞ்சம் பரிசோதனை நிலையிலேயே உள்ளது. ஆனாலும் நாம் “data-driven” brute-force கணிமையின் பலத்தினால் தமிழ் இலக்கணம் எதுவும் தெரியாமலேயே குருட்டாம்போக்கில் ஒரு திருத்தியை உருவாக்கலாம்.
இது முடிந்த காரியம் அல்ல. மேலும் முயற்ச்சி தொடரும்.