சங்க தமிழ்பயிலரங்கு – ஹார்வர்டு தமிழ் இருக்கை
பாஸ்டன் நகரில் கடைசியாக கோடை காலம். இல்லை, இது இன்னும் பனி குறைந்த இளவேனில் காலம். NETS என்ற “நியூ இங்கிலாந்து தமிழ் சங்கம்” நிறுவனத்தின் குழு, இங்கு (போஸ்டனில்) திருமதி. வைதேஹி ஹெர்பெர்ட் அவர்களை சங்க தமிழ்பயிலரங்கு ஒன்றினை, இலவசமாக எங்களுக்கு அளித்தனர்.
18 நூல்களையும் ஒரே மனிதராக பத்து ஆண்டுகளாக தானே மொழி பெயர்தமையால் அவருக்கு ஒரு மலை உச்சியில் இருந்து கிடைக்கும் “சங்க தமிழ் is a database” என்று சொல்லும் அளவிற்கு ஒரு பறந்த பார்வை கொண்டவர் திருமதி. வைதேஹி.
சங்க தமிழில் உள்ள விலங்கு, தாவரங்கள், ஜீவா ராசிகள், உணவு வகைகள், பூ, செடி, பறவைகளை பற்றி மட்டும் நாம் பல வகையான ஆய்வுகளை செய்யலாம், என்று திருமதி. வைதேஹி கூறினார். இதனை அவர் மொழியில், “சங்க தமிழ் is a database” என்ற சற்று பிரமிப்பூட்டும் வகையில் அறிக்கையிட்டார்.
மேலும் அவர் சில தொடர்ச்சியான சங்க தமிழ் சொற்கள் இன்று தமிழ், தொத்தி ஆங்கிலம், சீன, தாய்லாந்து மொழியில் பறவியதை எடுத்துகாட்டாக கூறினார்; கறி என்பது காரம் என்பதை மிளகின் காரம் இன்று “curry” என்று மாறியதையும், காசு என்பது “cash” என்று மாறியதையும் சுட்டி காட்டினார். அடுத்த முறை பனாங்கு காறி தின்னும் போது தாய்லாந்து உணவகத்தில் இது பற்றி ஒரு lecture நடத்தலாமோ!
பாஸ்டன் பாலா, மருத்துவர் திரு. சம்பந்தம் அய்யா, மற்றும் NETS குழுவினர், Connecticut தமிழ் சங்கம் உறுப்பினர்கள் என பலர் வந்து பயிலரங்கை சிறப்பித்தனர்.

நான்கு மணி நேரம் சென்றதே தெரியவில்லை. எனக்கும் குடும்பத்தின் வழியாக எனது சிறுவயதில் இவரை சந்திதேன்; அப்போது எனது தாயுடன் மேசீஸ் சென்றதை நினைவு கூறினார். போட்டோ ஒன்றை நினைவிற்கு எடுத்தோம்.
நானும் மனைவியும் எங்கள் சார்பில் ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைபிற்கு நன்கொடை கொடுத்தோம். சம்பந்தம் அய்யா ஒரு பெறிய ஆசை அணைபளித்தார். நாள் அளவில் அன்று மாலை யாரோ “தேமதுர தமிழ் ஓசை உலகமெங்கும் பரவட்டும்” என்று சொல்லியது நினைவில் வந்தது. வாழ்கையில் கற்றது கையளவு என்றும் தோன்றியது.
மாலை முடிந்து இரவு குளிர் காற்று அடிக்க தொடங்க, club-house இருக்கைகளை ஒரே போல் இருந்த மாதிரி வைத்து விட (இங்கு பழக்க படி) உதவினோம்; விளக்கை நிறுத்தினர். சங்க தமிழ் மனதில் ஒரு “cognitive dissonance” ஆக இந்த இரவின் நிழலில் மறுபடியும் “கறி” தின்ன ஹிக்வேஇல் வீடு திரும்பிநேன்.