
“காதல் என்ன பகடைக்காயா ?” என்று மறைந்த தழிழ் இயக்குனர் கே.பி ஒரு “கவிதாலயா” நாடகத்தில் refrain (பல்லவி?) ஆகா கேட்டார். இதற்க்கு விடை என்னவோ ஒரு வலைப்பதிவில் ஒரு கணினி வல்லுநர் சொல்லமுடியுமா என்பதற்கு மட்டுமே எனக்கு விடை தெரியும்.
தமிழ் சொல்வளம் சார்ந்த விளையாட்டுகள் என்பன ஒரு “மூளைக்கு வேலை” என்ற விளையாட்டு கோணத்தில் தமிழ் கற்பித்தலை மேற்கொள்ளலாம். இதை பற்றி சொல்வனம் கட்டுரையில் விரிவாக எழுதினேன்.
இப்போது ‘மோகம்’ என்பதை ‘காதல்’ என்று ஓரெழுத்து ஒவ்வொரு முரை மாற்றி சொல்லை மற்ற எய்யாலுமா என்று எனது இட்விட்டெர் கீச்சில் கேட்டான். இது ஒரு சங்கிலி சொல் “word chain” சொல் விளையாட்டு.
இதனை கணினியில் ஒரு தமிழ் அகராதி கொண்டு எளிமையாக செயல்படுத்தலாம்; ஆங்கிலத்தில் WSJ, NYT போன்ற நாளிதழ்கள் தினமும் ஒரு பக்கம் அளவில் சராசரியாக பார்க்கலாம்.
எனக்கு தெரிந்தளவில் ஓரெழுத்து நேர் மாற்றத்தில் ‘மோகம்’ -> ‘காதல்’ ஆகா மாற வாய்பில்லை; கூடவே எழுத்துக்கள் சேர்த்தும், விளக்கியும் ஓரெழுத்து அளவில் மாற்றத்தில் இது கெடுபடும் என்று தோன்றுகிறது.
மோகம் -> மோதல் -> காதல் என்று மாற்றலாம். இப்போது மோகம் என்பதை மோதல் என்று எப்படி மாற்றுவது ? சரி. மோகம் என்பதை முகம் என மாற்றலாம். அடுத்து முகம் என்பதை முதல் எனவும், பின்பு காதல் எனவும் மாற்றலாம்.
- மோகம்
- முகம்
- முதம்
- முதல்
- காதல்
அடடே! மோகம் சொல்லளவில் காதல் ஆகுமோ என்னவோ. யாருக்கு தெரியும் காதல் பகடைகாய என்று, நல்ல மானுஷன் போயுடாரே சொல்லாமல்!
சொல் தேடல் புதிர் பற்றி ஏற்கனவே சொல்லியிருந்தேன் – இந்த படம் (உலக தலைவர்கள்) போல.

இன்னூம் பல சொல்வளம் மிக்க விளையாட்டுகளாக உருவாக்கலாம் – நீங்களும் பங்காளியுங்கள்.
-முத்து
சான் ஒசே, விரிகூட பகுதி (BayArea), கலிஃபோர்னியா.
குறிப்பு: ஆமாங்க ஊரு விட்டு ஊரு வந்தோம்.