வாய்ப்பாடு -multiplication is not scary

வாய்ப்பாடு

கணிதம் என்பதை அறுவை, போர் ஆக்குவது என்பது சிறுவர்களுக்கு உடனடியாக விளங்காத சூத்திரங்களையும், வாய்ப்பாடு பட்டியல்களையும் நினைவில் கொள்ள செய்வது. பத்தாத குறையாக கேள்வி எழுப்பும் குழந்தைகளையும் அடி கொடுப்பது – இதுவே நமது இன்றைய பள்ளி நிலை. இதன் விளைவு என்ன ? கணக்கு வாத்தி என்பவரை கண்டாலே ஓடும் பயம் மட்டுமே பெரும்பாலானோர் மனதில் கொள்கின்றனர்.

மாறாக, வாய்ப்பாடு என்பது என்ன ?

இரு எண்களை பெருக்க வேண்டுமானால் முதலில் அவற்றின் வாய்ப்பாடு நினைவில் இருந்தால் எளிதாக கணிதம் செய்யலாம்.

பெருக்கல் கணித செயல்பாட்டின் இயல்புகளை கொண்டு சில விடைகளை எளிதாக கணக்கிட முடியும்.

1) உதாரணமாக, பெருக்கல் என்பதின் விடை பெருக்கல் என்றும் அமையும். இதனை ஒரு சமன்பாடு என்றும் எழுதலாம்,

                             அ x ஆ = ஆ x அ

இதனால் நீங்கள் 1 முதல் 15 வாய்ப்பாடு 12 எண்கள் வரை மனப்பாடம் செய்யும் வகை எவரும் கேட்டல் 1 முதல் 12 வாய்ப்படை 15 எண்கள் வரை மட்டுமே நினைவில் கொள்ள வேண்டும்!

2) மேலும், இரண்டில் ஏதேனும் ஒரு எண் 10, 100, 1000 என 10-இன் மூலம் ஆகா இருந்தால் அதன் விடை சுலபமாக மற்ற எண் பின் பூஜியுங்களை சேர்த்தது போல் அமையும்.

                                                123 x 100 = 12,300

3) பெருக்கல் என்ற கணக்கின் விடை என்பதை கூட்டினால் ( modulo 9 ) இந்த பெருக்கலில் உள்ள இரு எண்களையும் modulo 9 கூட்டி மீண்டும் பெருக்கி மீண்டும் modulo 9 செய்த எண் என்பதற்கு சமம். இது ஒரு (necessary but not sufficient) தேவையான ஆனால் தீர்மானிக்கபடாத  தேவை.

                                               123 x 45 = 5535

    இதனை எண்ணிம இலக்கு மூலம் கூடினால்  (digital sum)

                                                6 x 9   = 18, (இடது பக்கத்தில் 123 எண்  1 + 2 + 3 = 6, எனவும், 4 + 5 = 9 எனவும் மாறும்.)

                                                    5 4      = 9  ( வலது புரம் 1 + 8 = 9, இடது புரம் 6 x 9 = 54 எனவும் உள்ளது)

                                                      9       = 9

மேலும் பெருக்கல் என்பதற்கு நிறைய தன்மைகள் உண்டு. இவற்றை கற்று கொண்டால் நீங்கள், அல்லது உங்கள் மாணவர்கள், குழந்தைகள், இந்த வாய்ப்பாடு என்பதை கண்டு பயந்து ஓட வேண்டாம். கணிதம் என்பதை நண்பர் ஆகா ஆக்கி கொள்ளுங்கள்.

கால்சீ – நிரல் வெளியீடு – தமிழ் பேசும் கணிதம்

கால்சீ நிரல், ஒலி audio files மற்றும் உரை / எழுத்து சொற்கள் அனைத்தும் இன்று திற மூல மென்பொருள் என்று வெளியிட படுகிறது – இங்கு பாருங்கள்.

நன்றி.

எங்கள் வீட்டு பரிசு

ezhil-logo

எழில் மொழி அறக்கட்டளை இந்த ஆண்டு ஓரு சிறிய பரிசு தொகையை தமிழில் இயங்கும் மென்பொருள் வடிவமைக்கும் மாணவர்களுக்காக அறிவிக்கிறது.

தமிழ் கணிமை மட்டும் திற மூல மென்பொருள் உருவாக்குதல் என்ற சேவைகளை மாணவர்கள் மேற்கொள்ளும் வகையில் இந்த ஆண்டு ஒரு சிறிய பரிசு அறிவிக்கப்படுகிறது.

இந்த பரிசிற்கு விண்ணப்பிக்க இந்த சுட்டியில் சென்று படிமத்தை நிரப்பவும். விண்ணப்பங்கள் இந்த ஆண்டு கடைசி வரை ஏற்கப்படுகின்றன.

https://ezhillang.wufoo.com/forms/ezhil-language-scholarship/

மேலும் விவரங்களுக்கு எங்கள் மின் அஞ்சலில் அணுகவும் : ezhillang@gmail.com

நன்றி,

முத்து

 

ஆண்ட்ராய்டு செயலி “கால்சீ” : தமிழ் பேசும் கணக்கீடு

concept_calculator_logo

அறிமுகம் 

கால்சீ என்பது இன்று எழில் மொழி அறக்கட்டளை வெளியிடும் ஒரு தமிழ் பேசும்

screenshot_2016-12-13-02-39-401
கால்சீ: தமிழ் பேசும் கணக்கீடு – Google Play தளத்தில் பெறலாம் 

கணித செயலி / கணிப்பான். இந்த  தமிழ் பேசும் கால்குலேட்டர் கண் பார்வை
இல்லாதவர்களும் பயன்படுத்தும் வகையில் அமைந்தது. It has a simple tamil talkback calculator for blind users. கால்சீ என்ற ஆண்ட்ராய்டு செயலி : Android app Kalsee நிறுவ (Install from play store) இங்கு பார்க்கவும் https://play.google.com/store/apps/details?id=com.urbantamil.kalsee

 

வசதிகள் 

கால்சீ என்பது ஒரு எளிய Talkback தமிழ் கால்குலேட்டர் (கணிப்பான்).
ஒரு எளிய கணிதம் படங்களை ஒலி வழி பேசவும் செய்யும்.

இதன் வசதிகள்,

0. கண் பார்வை அற்றவர்களும் பயன்படுத்தும் வண்ணம் “long-press-mode” என்ற “நீள் அழுத்து” அமைப்பு உள்ளது
1. சுலபமான +, -, x, /. கணித செயல்பாடுகள்
2. இனிய தமிழ் குரலில் விடைகள் ஒலிக்கப்படும்
3. அதே குரலில் 0 முதல் – 9 வரை உள்ள இலக்குகளை (digits) ஒலிக்கும்
4. எழுத்துரு மாற்றலுக்கும் வழி உள்ளது
5. முற்றிலும் இலவசமாக, எந்த விளம்பரமும் இன்றி கிடைக்கிறது

வழங்கியது : எழில் மொழி அறக்கட்டளை

இந்த செயலியை வழங்க உறுதுணையாக இருந்த பலருக்கும் எனது நன்றிகள்.