பேசிச்சு சுதந்திரம், தனிப்பட்ட கருத்துகள், பொதுவாக ஒப்புக்கொள்ளாதவைகள் கூட தனி மனிதர் சுதந்திரத்திற்கும், ஜனநாயகம் செயல்படுவதற்கு முக்கியமானவை.
ஒருவர் பேச்சு சுந்தந்திரத்தை, அவர் சாமானியர் என்பவர் ஆயினும், திரை கலைஞர் ஆயினும் அவர்களை மனிதர் என்று முதலில் கருதி செயல்படுவது முக்கியமானது.
“ஒப்பரேஷன் சக்ஸஸ், அனால் பேஷண்ட் இறந்துட்டாள்,” என்று ஆகிய நிலத்தில் நாம் தமிழரா இல்லை தலிபானா ? பேச்சு சுந்தந்திரத்தை இணையத்தின் மரைமுகமான தாக்குதல்களுக்கு ஆதரிக்காமல் தமிழர் கருத்தில் வேற்றுமைகளும் உண்டு என்று சிந்தனையில் கொண்டு இயங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
என்னை பொறுத்த அளவில் நம் பாரம்பரிய வீர விளையாட்டை தடை செய்வது என்பது முட்டாள்தனம். இதனை அனைவருக்கும் – விலங்கிற்கும் சரி, ஆட்ட வீரர்களுக்கும் சரி – பாதுகாப்பான முறையில் விதிகள் அமைத்து முன்னேறும் வழிகளை காண அரசு வழி செய்ய வேண்டும்.