கணினியியல் (computer science/computing) என்பது கணிதத்தின் ஒரு சிறு பகுதி. சிந்தனை களத்தை தாண்டியே மொழி அமைய வேண்டும் என்பதானால் மொழியாக்கம் என்பது இரு தீவுகளுக்கும் இடையே ஓடும் ஒரு பாலம்.
இப்படி கணினியியலில் ஒரு தரமான ஆங்கில புத்தகம் “Rubykin” (ரூபி தோழமை, என்று மொழியாக்கம் செய்யலாம் ). இதனை தமிழ் தண்ணார்வாலர்களுடன் எழில் மொழி அறக்கட்டளையின் சார்பாக மொழிபெயர்த்து வருகிறோம்.
சாதாரணமாகவே இந்த “lost in translation” எனப்படும் சிக்கல் உள்ள வேலை – இதில் நுட்பங்களும், கணினியியல் என்பதும், உள்ளதால் சிறிது தாமதம் ஆனது. முதலில் RubyKin எழுதியவர்களிடம் உரிமைகளை Creative Commons பொதுவெளியில் வெளியிட கேட்டோம். திரு. டக் வ்ரைட் (Doug Wright) அவர்கள் புத்தகமும், படங்களையும் சேர்த்து பொதுவெளியில் கொடுத்தார்.
இன்று கிட்டத்தட்ட ஐம்பது சதவிகிதம் கூடுதலாக (> 50%) இந்த காரியம் நிறைவேறியது. மேலும் இந்த வேகத்தில் சென்றால் 2017 ஆண்டு முடிவுக்குள் இந்த புத்தகத்தை மொழிபெயர்க்கலாம் என்று தோன்றுகிறது.
பங்களித்தவர்கள் அனைவருக்கும், RubyKin எழுத்தியவருக்கும் நன்றி.