எல்லா மென்பொருளிலுமே ஒரு “Help” (உதவி) மெனு கொடுப்பது IT துறையில் உள்ள ஒரு எழுதாத சட்டம் என்றே சொல்லலாம்.
இப்போது இந்த எழில் செயலி எழுதியில் ஒரு உதவி ஆவணம் கட்டியை முன்னாடியே இணைத்திட்டோம். ஆனால் அது மனசுக்கு பிடித்தமாதிரி இல்லை.
இப்போது இந்த window (சாளரத்தில்) எனக்கு மூன்று விஷயங்கள் பிடிக்கவில்லை; இதற்க்கு படம் 1 உதவியாக இருக்கும்:
- புத்தகத்து தலைப்பு “0” என்று சொல்லக்கூடாது; இது நீக்கப்படவேண்டும்.
- அடுத்து அத்தியாயங்களின் தலைப்பு இடது பக்கம் ஆரம்பித்து இருக்கவேண்டும்.
படம் 1: எ ழுதி உதவி ஆவணம் காட்டி - அடுத்து அத்தியாயத்தின் தலைப்பை பெரிய எழுத்துக்களில் இருக்க செய்யவேண்டும்.
இவற்றை github வழு பட்டியலில் issue என்று பதிவு செய்தேன்
இதனை GTK3+ documentation கைவசம் வைத்து நிரலை மாத்தி எழுதலாம். இதற்க்கு முன்னும் பின்னும் ஒரு மணி நேரம் மேல் ஆனது.
ஒவ்வொரு முறையும் ezhil-lang/editor/DocView.py என்ற நிரலை மாற்றிய பின் python ezhuthi.py என்று இயக்கி “உதவி > புத்தகம்” என்ற மெனுவில் இருந்து சுடக்கி இதன் தோற்றத்தை சரிபார்க்கவேண்டும்.
எல்லாம் சரியானதும் இது போன்று காட்சி அளித்தது:

இதனை github-இல் உடனே சேர்த்துவிட்டேன். இப்போது எழில் ஆவணம் காட்டி மேம்பாடு செய்தாச்சு ! மீன்டும் பார்க்கலாம்.
-முத்து