கைவசம் வேகமாக எழில் திருத்தியில் இயக்கு என்று செய்வதற்கு ஒரு பட்டன் இல்லை இதுவரை. இதனால் நீங்கள் குறுகிய நிரலை எழுதினாலும், அல்லது “தமிழில் நிரல் எழுது” புத்தகத்தில் உள்ள உதாரணங்களை “உதவி” மெனுவில் இருந்து இயக்கிவருவதும் கொஞ்சம் கடினமாக அமையும்.
வருகை வேகமாக இயக்க, வலது சொடுக்கு right-click மெனுவில் இயக்கு என்று பட்டனை இன்று சேர்த்தேன். இது கொஞ்சம் விறுவிறுப்பான வேலை. இது எப்படி செயல்படுகிறது என்று பாருங்களேன்,
- முதலில் எழில் திருத்தியான “எழுதி” திறக்கவும்.
- இரண்டாவதாக “இயக்கு” என்ற கருவி பட்டையில் (toolbar) உள்ள பட்டனை சொடுக்குங்கள். இது பச்சை எழுத்துக்களில் உள்ள நிரல் வெளியீடை தரும். (வலது புரம் பார்க்கவும்.)
- மூன்றாவதாக, உதாரணத்துக்கு உங்களுக்கு “30-ன் அடுக்கு பெருக்கு எவ்வளவு?” என்ற கேள்வியை விடைகாண இங்கு எழுதலாம். இடது பக்கம் எழுதியபின் இதனை “வலது சொடுக்கி இயக்கு” என்று சொல்லவும் – கீழ் கண்டது போல.
- அடுத்து “விரைவாக இயக்கு” என்பது விடையை உங்களுக்கு அளிக்கும்.
இது இன்றைய அக்கம்.