வருங்காலத்தில் ஒரு தமிழ் செயற்கை நுண்ணறிவு உருவாக்கப்படும். உடனுக்குடன் ‘இன்ஸ்டண்டா’ ஆங்கிலத்தில் இனையான தமிழ் சொற்களை தேடி அல்லது உருவாக்கி சொல்லும். ஆமாம் எந்திரம் சொல்லாடலில் எப்படியும் உள்ளே வரப்போகிரது. நமக்கும் உதவட்டுமே!
தமிழ் மரபுகளுடன், மொழி பழக்கவழக்கங்களுடன் சரிவர, முடிந்த அளவு வட மொழி சொற்கள் சேற்காமல், மேலும் ஒரு படி அதிகமாக ஆங்கிலம் கலப்பின்றி [முற்றிலும் ஒழிக்கமுடியுமா? தெரியவில்லை; கணினிதானே, இலக்கைவைத்தால் முடியாதா என்ன ?]

இத்தகைய செயற்கை நுண்ணறிவு உருவாக்கினால், அதற்கு செல்வா என்று செல்லமாக பெயரிடுவோம். அரிமா ரோபோ C-3PO, R2D2 மாதிரியான, புவியில் இல்லாத தமிழ் அறிவு கொண்ட ஒரு ஓரகில் [Oracle]-ஆக அமையுமோ என்னவோ. ஐயா கலாம் சொன்னது கனவுகள் நினைவாக விழித்திடு; தூக்கத்தை கலைத்திடு.
😍