உங்களது தமிழ் உரைகளை ஒலி வடிவாக்க கணியம் அறக்கட்டளைஒரு புதிய சேவைஉருவாக்கியுள்ளது. பயன்படுத்த சுட்டி http://tts.kaniyam.com

இந்த செயலியின் வெளியீடு அறிக்கையை இங்கு காணலாம்: வாழ்துக்கள் கணியம் அறக்கட்டளை, குழு நபர்கள்! ‘ஊரே கூடி தேர் இழுத்ததாக’ சுவையான http://tts.kaniyam.comஉரையொலி மாற்றியைவெளியீட்டு செய்தியில் குறிப்பிடதும் ஒரு திறமூல உறவுகளின் சிறப்பு!. அடுத்ததா எப்போதிருவிழா? 🎇🎠✨
செயல்படுத்துதல்
சரி இந்த சேவையை எப்படி செயல்படுத்தலாம் ? இதோ இதனை படிப்படியாக புட்டு வைக்க முயற்சி கீழே. இதில் உங்களது உரைவடிவ கோப்புக்களை [file] தளத்தில் ஏற்ற வேண்டும் – பின்பு தளம் உங்களது .
- கணக்கை உருவக்குங்கள்; இதில் பயனர் பெயர், கடவுச்சொல் குடுக்கவேண்டும்.
- இரண்டாவது, தளத்தில் இருந்து ஒரு மினஞ்சல் வரும் – அந்த சுட்டியை திறக்கவும்.
- தற்போது நீங்கள் உள்நூழயலாம்; [இதற்கு எற்கணவே படி 1-இல் குடுக்கப்பட்டுள்ள திரையில் செல்லலாம்]. உங்களது உரையை சாதா கோப்பாக இதில் இடவும். PDF போன்ற கோப்புகளை நிங்கள் இந்த செயலியில் இடும்முன் மாற்றவேண்டும்.
- ஏற்றுமதி செய்தபின் தளம் உங்களது உரையை ஒலியாக மாற்ற சில நேரம் ஆகும். இதனால் உங்களது வோலை முடிந்த பின் அதற்க்கான் மின் அஞ்சலை பெரும் வரை காத்திருக்கவும். தற்ச்சமையம் உடனுக்குடன் பெரும்வகை இதனை செயல் படுத்த இயலாது.
- மின் அஞ்சல் வந்தபின் அதனில் உள்ள சுட்டியில் உங்கள் உரை மின் ஒலிவடிவில்! முற்றிலும் இலவசம்!
ஒலிமாற்றியின் தரம்!
நீங்களே கேட்டு முடிவு செய்யுங்கள்! எனது மூல கோப்பு இங்கு – இதன் வெளியீடு ஒலி இங்கு கேட்கவும்.
தொழில்நூட்பங்கள்
ஒரு மூத்த கணினி நிரலாளரின் கூற்றின் படி ‘கணினித்துரையின் கோட்பாடுகள் கண்டறிந்து சில பத்தாண்டுகளே ஆனது. இதில் உள்ள கோட்பாடுகள் இயற்க்கை அறிவியலால் கட்டுப்பட்டதல்ல’ என்ற பொருளில் இந்த படைப்பை நான் பாற்க்கிரேன்.
உரை-ஒலி மாற்றியில் பல digitial signal processing சவால்கள் உள்ளன. இவற்றை படிப்படியாக கடந்த பெருமை, உழைப்பு, பாராட்டுக்கள் பேரா. திரு. தி. நாகராஜன் [SSN பொறியியல் கல்லூரி] -யை சேரும். இவரது தலைமையில் unit-selection-synthesis என்ற முறையில் Festival என்ற எடின்புரூ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி தளத்தின்வாயில் இவரது தமிழ் மொழி ஆராய்ச்சிகள் இருந்திருக்கின்றன.


ஆனால் இந்த இவரது ஆராய்ச்சிகள், இந்திய அரசின் வரி பணத்தில் ஒரு பங்கில் இருந்து வந்தாலும், இது எளிதில் பொது வளியில் இந்த மென்பொருள் வெளிவரவில்லை; இதற்கு தகவல் தொழில் நூட்பம் சட்டத்தின் கீழ் [RTI] திரு. சீனிவாசன் சென்ற ஆண்டு முயற்சிகள் எடுத்தும் வழி நடத்தியும், தனது பணிகளினால் இந்த மென்பொருளை பொது வெளியில் பயன்படுத்தும் அளவில் கொண்டுவந்தார்.

https://github.com/tshrinivasan/tamil-tts-install
இது இரண்டு மட்டுமே நமக்கு இன்ரு கணியத்தில் இந்த சேவை கிடைக்க மூல காரணமாக இருக்கிரது. கணியம் ஆசிரியர் அவரது வெளியீட்டில் வலை சர்வர் மென்பொருள் கட்டமைப்பு அதனை உருவாக்கியவர்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
கணியம் அறக்கட்டளை, IIT-SSN கூட்டனி, மேலும் அயராமல் உழைத்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு இந்த தொழில் நூட்பங்களை வழங்கிய அனைவருக்கும் இதயம்கனிந்த நன்றி! வாழ்க, வளமுடன்.