சென்ற பதிவில் ஒரு தொடக்கத்தை ஆரம்பம் செய்தோம்; இந்த பதிவில் அதே வேகத்தில் தொடர்வோம். இடைவெளியில் மூன்று முக்கியமான அறிவியல் ஆராய்ச்சிசிகளை பற்றி உங்கள் கவணத்தை ஈர்த்து செல்ல விடுங்கள்.

1 முதல் ஆய்வுகளின் முடிவு
சொல்திருத்திகளின் சவால்கள் – ஒரு கணக்கெடுப்பும், மேலோட்டமான விளக்கமும் என்ற தலைப்பில் கேரன் குகிச் என்ற ஆரய்ச்சியாளர் Techniques for automatically correcting words in text 1992-இல் ACM சஞ்சிகையில் அற்புதமாக விளக்கம் அளித்துள்ளார். இது ஒரு கணக்கெடுப்பு என்பதால் 63 பக்கங்கள் கொண்டதாக உள்ளது. கண்டிப்பாக சொல்திருத்தியில் ஆராய்ச்சி செய்ய முனைபவரும், செயல்படுத்துபவரும் இதை வாசித்தல் வேண்டும்.
2 சொந்தங்கள் அவை கண்ட அறிவு
அடுத்து எனது வாசிப்பில் நான் அலசி சல்லடைபோட்டு மீன்பிடித்ததில் இணைய வலையில் சிக்கிய மீன் – தங்கமீன் – இந்த துருக்கி அறிவியலாளர் குழு எழுதிய 1994-இல் வெளிவந்த இந்த கட்டுரை – ஒட்டு மொழிகளினுள் உண்டான அம்சங்களில் ஒரு சொல்திருத்தியை உருவாக்குவது எப்படி – Kemal Oflazer , Cemaleddin Güzey, Spelling correction in agglutinative languages, PDF என்பதை மைய்யமாகக்கொண்டு கணிமை கோட்பாடுகளில் செயல்முறைகளை சாட்சியப்படுதினார்கள். ஃபின்னிஷ், துருக்கி போன்ற மொழிகள் தமிழைப்போல் ஒட்டு மொழி என்ற சொல்லடல் இலக்கண வகைப்படுத்தப்பட்டவை. ஃபின்னிஷ்-தமிழ் தொடர்பு மிக பெரியது – ஐராவதம் அவர்களைக் கேளுங்கள், இல்லை சிந்து சமவெளியில் போய் பாருங்கள் [விளையாட்டாதான்]!
3 கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம்
மூன்றாவதாக நான் சொல்வது பொதுவில் ‘எங்க அப்பன் குதிருக்குள்ள இல்லை’ என்ற பொது இரகசியமாக உள்ள தனபால் – கீதா அண்ணா பல்கலை அறிவியலாளர்களின் 2003-இல் வெளிவந்த கட்டுரை. இதில் பலவிதிகளை நாம் நேரடியாகவும், மேம்பாடு செய்தும் செயல்படுத்தலாம். “Tamil spell checker,” என்று T. Dhanabalan, R Parthasarathi… – Sixth Tamil Internet 2003
4 அடுத்த படியாக
இவை எல்லாம் ஒரே நாளில் யாரும் படிக்க சுலபமாக முடியாது. இருந்தாலும் இப்படிப்பட்ட சிக்காலான் மொழியியல் காட்டிற்குள் அடங் கிய பூதம்தான் ஒரு சொல் திருத்தி. புகைப்போட்டோ பொரிவைத்தோ இந்த ஒரு சித்தாந்த சொல் அன்னத்தை வழிமரித்து பொது பயன்னுக்கு அளிப்பது, நமக்கும், வருங்கால தமிழ் எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் உண்மையிலேயே ஒரு அளப்பரிய செயல். அடுத்த பதிவில் இந்த ஆராய்ச்சிகளில் உள்ள சில செயல்முரைகளின் உருவங்களையும், கீற்றுகளையும், நடைமுரை விளக்கங்களையும் பார்க்கலாம்.
அட்டகாசமான தொடர். தொடர்ந்து எழுதுக. நன்றி