இந்த தொடரின் பதிவில் எப்படி ஒரு தட்டச்சு பிழைகளை தீர்க்கலாம் என்று பார்க்கலாம். இவையும் ஏற்கனவே கூறிய குறைவான திருத்தம் தொலைவு என்ற அளப்பின் சார்பின் கீழ் அலசப்படும் ஒரு கேள்வி. சரி, அப்ப என்ன புதுசா ?

1 ஏன், எப்படி
விஷயத்துக்கு வாரோம். புதுசு என்ன ? அதாவது தட்டச்சு பிழைகள் என்பது தமிழில் ஒரு வழி மட்டும் வருகின்றன – விசைபலகை வழியாக (typographical errors originate from keyboard). இதன் காரணமாக, நாம் ‘பாம்பின்கால் பாம்பு அறியும்’ என்பது போல், இந்த சிக்கல் உறுவாகும் இடத்தின் விசைப்பலகையின் கட்டமைப்பின் வழியாக இதனைத் தீர்வு காண முடியும். இதனை ‘அருகிலேயே உள்ள விசைப் பிழை’ என்றும் [nearest neighbor key error] சொல்லாம்.
2 செயல்முரை அல்கோரிதம்
தற்சமயம் தமிழ் 99 என்ற விசைபலகையில் உள்ளீடு செய்வது என்ற கொள்வோம். இதில் உள்ளீட்டு பிழை என்பது ‘இ’ என்ற எழுத்தை இடும் சமயம், ‘அ’, ‘ஈ’, ‘உ’, ‘ஓ’,’ஔ’ என்று கைவிரல் தவரி சொடுக்கினால் ‘இன்பம்’ என்ற சொல் உள்ளீடு ‘அன்பம்’ அல்லது ‘உன்பம்’ என்றும் மாற்றமடைவதற்கு வாப்புண்டு.
சரி: இன்பம், தவறு: அன்பம், உன்பம்
இப்போது ஆவனத்தில் இப்படி ஒரு பிழை வந்தது ‘அன்பம்‘ அல்லது ‘உன்பம்’. இதனை நாம் சொல் உள்ளீட்டு பிழை என்ற இந்த செயல்முறை அல்கோரிதத்தின் வழி திருத்தலாம். இந்த தட்டச்சுபிழை எழுத்து பிழை வாய்ப்புகள் அனைத்தும் ஒரு மயக்க அணியில் (‘confusion matrix’ என்று சொல்லக்கூடிய) நிரலிக்கு குறிப்பிட்டிருக்கவேண்டும். இதனை படம் 2-இல் காட்டுகிறோன்.

இதற்கு மேற்கண்ட அல்கோரிதத்தை இயக்கினால் 56 மாற்றங்களைத்தரும். இவற்றில் சரியான் சொற்களை மட்டும், குறைந்த திருத்த தொலைவில் இருப்பவற்றை மட்டும் நாம் ஏற்றுக் கொண்டால் அதில் ‘இன்பம்’ என்ற சரியான் சொல் இருக்கிரது! இதுவே தட்டச்சு பிழை சொல்திருத்தியின் இயக்கம். இதனைப் பற்றி பல அறிவியலாளர்களும் எழுதியுள்ளார்கள் என்பது புதிய செய்தி இல்லை என்பதையும் இங்கு பதிவு செய்வது கவணத்தில் கொள்ளவேண்டியவை.
- ஈன்பம்
- இன்பம்
- ஆன்பம்
- உன்பம்
- ஊன்பம்
- அன்பம்
- ஔன்பம்
- ஈற்பம்
- ஈப்பம்
- ஈக்பம்
- ஈட்பம்
- ஈம்பம்
- இற்பம்
- இப்பம்
- இக்பம்
- இட்பம்
- இம்பம்
- ஆற்பம்
- ஆப்பம்
- ஆக்பம்
- ஆட்பம்
- ஆம்பம்
- ஈன்னம்
- ஈன்மம்
- ஈன்றம்
- ஈன்லம்
- ஈன்கம்
- ஈன்ஙம்
- ஈன்டம்
- இன்னம்
- இன்மம்
- இன்றம்
- இன்லம்
- இன்கம்
- இன்ஙம்
- இன்டம்
- ஆன்னம்
- ஆன்மம்
- ஆன்றம்
- ஆன்லம்
- ஆன்கம்
- ஆன்ஙம்
- ஆன்டம்
- அன்னம்
- அன்மம்
- அன்றம்
- அன்லம்
- அன்கம்
- அன்ஙம்
- அன்டம்
- அன்ணம்
- அன்தம்
- அன்ரம்
- அன்ளம்
- அன்எம்
- அன்வம்
4 செயல்படுத்துதல், குறிப்புகள்
இந்த அல்கோரிதத்தின் நிரலாக்கம் இங்கு ஓப்பன் தமிழ் திரட்டில் சேர்க்கப்பட்டது. இதனை நீங்கள் முழுதேடலில் இடம் கொடுத்தால் 2398 விடைகள் கிடைக்கும் – அதாவது முழு 4-எழுத்து சொல்லின் 4-எழுத்து தொலைவில் உள்ள திருத்தங்கள் எல்லாவற்றையும் தேடுவதால் உண்டாகும் தகவல் வெள்ளப்பெருக்கு; சாதாரணமாக 1 அல்லது 2 எழுத்துப்பிழைகள் மட்டுமே உள்ளன என்பது அறிவியலாளர்கள் கணிப்பு. இதை நாம் செயல்படுத்தும் ‘tree pruning search‘ அல்கொரிதம் வகையினால் நாம் 56 மாற்றங்களுக்குள் மட்டுமே தேடல்களை நடத்தி இந்த தட்டச்சு கைவிரல் தவரான உள்ளீட்டிற்கு தீர்வு காணலாம்.
இதன் சிக்கல் அளவு [computational complexity] என்பது, ஒரு n-எழுத்து சொல் என்று கொண்டால், O(k1 x k2 x k3 … kn ) = O( kn ) என்று அதிக பட்சமாக இருக்கலாம் என்று [ஏதோ ஒரு k > 0 எண்ணால்] என்று நம்மால் காட்டமுடியும்.
arumai…