கட்டுரைத் தொடரில் இந்த பதிவில் மேலோட்டமான சொல்திருத்தியின் பிழைதிருத்தம் அல்கோரிதம் எப்படி கட்டமைக்கப்பட்டிருக்கு என்றும் பார்க்கலாம்.

1 பிழைதிருத்தி அல்கோரிதம்
உள்ளீடு : உரையின் சொற்கள் ஒவ்வொன்றாக. இடம்-பொருள் விளங்குவதற்கு [context] நாம் சொல் இடம் பெரும் வரியை சூழலுக்கு உள்ளீடாக கொடுக்கலாம்.
வெளியீடு: தவரான சொற்களின் பட்டியல், மற்றும் இவ்வாறு பிழையான் சொற்களின் வாயில் என்ன வேற்று சொல்லை மற்றாக இணைக்கலாம் என்ற பட்டியல்.
இப்படிப்பட்ட ஒரு அல்கோரிதத்தை செயல்ப்படுத்த நமக்கு ஒரு சொல்பட்டியல் தேவை; இதை நாம் அகராதி என்று வழக்கு மாரி சொல்வோம். அதாவது நமக்கு சொல் மற்றும் அதன் சரியான எழுத்து வடிவம் மற்றுமே தேவை – சொல்லின் பொருள் முதலில் தேவை இல்லை. ஆகையால் இந்த சொல் பட்டியல் மட்டுமே அகராதி என்று நம்மால் கருதப்படும்.
முதல் படியாக உரையில் உள்ள சொற்கள் நேரடியே பட்டியலில் காணப்பட்டால் இதனை நாம் சரியான சொல் என்றும் அவற்றை நீக்கி விடலாம். எ.கா. “அவன் வாத்து முட்டை விருப்பம் கொண்டவளை மட்டுமே சமைக்க தேர்ந்தெடுப்பதாக சீனாவில் அறிவித்திருந்தான்” என்ற 10 சொல் வாக்கியத்தில் ‘அவன்’, ‘வத்து’, ‘முட்டை’, ‘விருப்பம்’, என்ற சொற்கள் சரியாக சொல் பட்டியலில் இருக்கும். தற்போது – 6 சொற்கள் மீதம் உள்ளன.
அடுத்தபடியாக பெயர்சொற்கள் அவற்றின் பட்டியல் கொண்டால் இதனையும் நாம் நீக்கிவிடலாம். மேல் உள்ள செயற்கையான உதாரனத்தில் ‘சீனா’ என்ற பெயர் சொல் நேரடியாக இந்த பட்டியலில் காணப்படும். தற்போது – 5 சொற்கள் மீதம் உள்ளன.
அடுத்தபடியாக வினைச்சொற்கள், மற்றும் இலக்கண வகைபடுத்தப்பட்ட இடைச்சொற்கள், ஆகுபெயர்கள், ஆகியவற்றை சரியாக பகுத்தாய்ந்து விதிகளுடன் உணர்ந்தால் சில அடிச்சொற்கள் கொண்ட பட்டியலின் வழியே மட்டும் அவற்றின் ஆக்கல் தன்மையின் வாயிலாக பல சொற்களை நாம் பகுத்தரியும் வகையில் அனுகலாம். தமிழில், இலத்தின் போல, வினைஎச்சங்கள், வினைச்சொற்கள் அவை வாக்கியத்தில் இடம் பெரும் இடங்கள் கண்டு மருவி வருகிண்ரன. எ.கா. ‘அவன் ஒரு சட்டை வாங்க சென்றான்’, ‘அவள் ஒரு சட்டை வாங்க சொல்வாள்’ என்ற இரு வாக்கியங்களில் ‘செல்’ என்ற சொல் மருவி ஆணுக்கு ‘சென்றான்’ என்றும் பெண்ணுக்கு ‘செல்வாள்’ என்றும் வருகிரது. இது சற்று சிக்கலான ஒரு அல்கொரிதத்தின் கீற்றாகவே அமைகிரது; இதனை அதிகம் மொழியியலாகவும் சற்று கம்மியாக கணினியியலாகவும் கருதலாம்.
தமிழில் உள்ள இலக்கண விதிகளை பேரா. ராஜம் அவர்கள் letsgrammar.org என்ற தளத்தில் வினைச்சொற்கள் எப்படி மருவும் என்ற விதிகளை மென்பொருளில் நிருவி அழகாக விளக்கியுள்ளார். இவற்றை ஆங்கிலத்தில் ‘word declension rules’ என்று சொல்வார்கள்.
எண்கள், வடமொழி சொற்கள், நிருத்த சொற்கள், பன்மை சொற்கள், ஆங்கில சொற்கள் ஆகியவற்றையும் நாம் கண்டறிந்து உரையினை இவற்றிலிருந்து நீக்கம் அல்லது பிழை திருத்தம் செய்யலாம். தட்டுப்பிழைகள், ஒருங்குரி பிழைகள் போன்றவற்றையும் இந்நிலையில் நாம் நீக்கிவிடலாம்.
2 பிழை வகைகள்
மேல் சொன்னபடி சொல்திருத்திகள் அவைகளின் நான்கு படினிலைகளில் ஏதேனும் ஒரு சொல்லை [உரையில் உள்ள] அந்தந்த வகுப்பில் உள்ளதாகவும் கண்டு, அதே சொல் தவராக உருவெடுத்திருந்தால் அது தவரான சொல் என்றும், அதனை நாம் சரிசெய்து – மாற்றங்களை பரிந்துரைக்கலாம். இதையே ‘wrong word error’ என்று சொல்லாம்.
கடைசியில், இவ்வாரு நான்கு படிகளில் நீக்கம் செய்யப்படாத சொற்களை நாம் அகராதியில் இல்லாத சொற்கள் என்று மட்டுமே கருதலாம். அதாவது இவற்றை ‘non-word error’ என்று கண்டறிந்து சொல்லாம். இவற்றில் நாம் மாற்று சொற்களை தரமுடியாது.
concordance தரவுகள் இருப்பின் ‘அன்பே சிவம் என்பர் சைவ சித்தாந்திகள்‘, மற்றும் ‘அன்பே சவம் என்பர் சைவ சித்தாந்திகள்‘ என்ற இரு வாக்கியங்களுக்கும் மாற்றுகள் மேல் கண்ட சொல்திருத்தியினை மேம்படுத்தி செயல்படுத்த செய்யலாம்.
3. வழங்கல்
இந்த நிலைகள் முழுதும் ஒரு மேலோட்டமான ஒவ்வொரு சொல்திருத்தியின் கட்டமைப்பிலும் இருப்பதாக நாம் உணரலாம்.
சொல்திருத்தி என்பது உரையினை உள்வாங்கிக்கொண்டு சரியான சொற்களை முழுதும் கண்டுகொள்ளாது. தவரான சொற்களை மட்டுமே மையமாக கொண்டு இயங்குகிரது. என்னடா வாழ்க்கையிது, கால்ஃபு போல் சொல்திருத்திகள், எல்லாமே சரியான ஆட்டத்தினால் நிற்னயிக்கப்படுவதில்லை – பிழையான சொல், பிழையான ஆட்டம் அதே வெற்றியை நிற்னயிக்கிரது. இதன் பணி:
- தவரான சொற்களை சுட்டிக்காட்ட வேண்டும்
- தவரான சொற்களுக்கு மாற்றங்களை காட்ட வேண்டும்
- தவரான் சொல்லுக்கு பயனர் மாற்று தரவிருந்தால் அதனை சொல் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்; அதனை உரையிலும் மாற்றவேண்டும்.
கடைசியில் அனைத்து உள்ளீடுகளையும் ஒருங்கிணைத்து சரியான உரையை சொல்திருத்தி வழங்கும்.
One thought on “சொல்திருத்தி – தெறிந்தவை 5”