மொழியில் ஆக்க சக்திகளை தோராயமாக, தொல்கப்பியம், இலக்கணம் எல்லாம் தெறியாமலேயே ஒரு மொழியின் மாதிரியில் இருந்து (புள்ளியியல் வழி உருவாக்கியது) சரியான அல்லது பிழையான சொல், வாக்கியம், சொல் அமையும் இடம், இடம்-பொருள் ஒற்றுமை போன்றவற்றை நாம் சரியாக சொல்லலாம். அதற்கு மொழிமாதிரி கேட்குது நம்ம கணினி.
பொது தமிழ் தரவுகள் ஆகியவை
- மதுரை திட்டம்
- தமிழ் விக்கிப்பீடியா
- freetamilebooks மின் புத்தக தரவு
- பிரபல நாளிதள், வார இதள், வலை இதள் போன்றவற்றின் தரவு.
இவை ஓவ்வொன்றும் ஒவ்வொரு கால கட்ட தமிழை, அல்லது பல கால கட்ட தமிழ் வழக்கை கொண்டவையாக அமைகின்றன. மென்மேலும், ஒவ்வொன்றும் வெவ்வேறு ‘header information’ மேலான்மை தகவல்களினுள் பொருத்தப்பட்டருக்கின்றன.
இதனை நாம் சரியாக புரிந்து கொண்டதன் பின்னரே ஒரு மொழி மாதிரியை உருவாக்கலாம். மொழி மாதிரி என்பது நிறுத்த சொற்கள் நீக்கப்பட்ட சொல் தரவினில் இருந்து மட்டுமே உருவாக்கியதாகவும், முழுக்க முழுக்க தேவையற்ற மேலான்மை தகவல்கள் இல்லாமல் இருக்க வேண்டும். இவை இருந்தால் சிறப்பாக ஒரு மொழி மாதிரியை தயார் செய்யலாம்; இதனை எனது டுவீட்டில் பார்க்கலாம்:

ஏற்கனவே செய்த வேலைகளில் இந்த குறைபாடுகள் இருந்திருக்கின்றன; இப்போது தான் தெறிந்துகொண்டேன்.
சமீபத்தில் இந்த சிக்கலில் மாட்டினேன்: சரியான தொடக்க நிலையில் இருந்து தொடங்குவது அவசியம். நான் விக்கிபீடியா தரவை அப்படியே header-information உடன் எதையும் துப்புரவு செய்யாமல் 13 இலட்சம் சொற்களை வரிசைடுத்தினேன். எல்லாம் பிரயோஜனத்துக்கிலை.

நக்கீரண் வேலை பார்க்க முயன்றால் கொஞ்சமாவது பயபக்தி வேண்டாமா ?
One thought on “சொல்திருத்தி – தெறிந்தவை 6”