ஓப்பன் தமிழ் திட்டத்திற்கு ஒரு சின்னம் உருவாக்கலாம் என்று திடீரென்று ஒரு என்னம். காரணம் சம்சாரம் வாரம் அவளுடன் படம், ஓவியம், வண்ணம் தீட்டுதல் பொன்ற கலை செயல்களில் நேரம் செலவிட வேண்டும், இது உறவிற்கு பொருள் சிறப்பிக்கும் என்று திசை காட்டினாள். அதன்வரை கிருக்கல்களாக மட்டும், ஏதோ பள்ளியில் செய்த வேலைகள் எல்லாம் தான் ஞாபகம் வரும்; மூளையின் இரு பகுதிகளும் தர்க்க ரீதியாகவும், கலை/மொழி உணர்வுகளுடன் தனித்தனியே சிறந்து விளங்கும் என்ற தன்மையை இத்தகைய கலை வளர்ச்சி [Art therapy] ஊக்குவிக்கிறது என்பது இங்கு அமரிக்காவில் உள்ள உளவியல் புரிதலாக இருக்கிறது.
இத்தகைய பின்புலத்தின் அடிப்படையில் நான் இரு படங்களை தோராயமாக வரைந்தேன்; வண்ணம் தீட்டும் பென்சில்களின் வழியாக வந்த ஆக்கங்கள்:


இவற்றை கொண்டு எனது கீச்சுகளின் வாயிலாக உதவி கேட்டேன்; முழுதாக ஒரு எஸ். வி. ஜி [SVG] வடிவில் அமைக்கப்பட்ட ஒரு வடிவமாக இந்த சின்னம் இருந்தால் மட்டுமே பல இடங்களில் பயன்படுத்தலாம் என்பதால் அதை இலக்காக வைத்தேன்.
சில நல்ல சின்ன பதிவுகள் / பறிந்துரைகள் இங்கே:


மேல் கண்ட சின்னங்கள் எல்லாம் நன்றாக இருந்தாலும், எனக்குப் பிடித்ததாக அமைந்த சின்னம் இங்கு:
