என்ன :
கூகிள் நிறுவனம் CoLab – Code-Laboratory என்ற ஒரு சோவையை பெரும்பாலும் பைத்தான் வழி செயற்கையறிவு நிரல்களை (TensorFlow கொண்டு) உருவாக்க பொதுமக்களுக்கு வழ்ங்கியுள்ளது. ஆனால் இதனை தமிழ் கணிமைக்கு பயன்படுத்தலாமா ? ஆம்.
எப்படி:
ஒரு உதாரணமாக இந்த ‘பயில் தமிழ்’ interactive python (ipynb) நோட் புத்தகத்தில் (சுட்டி இங்கு) தொடங்கினால் எப்படி ஓப்பன் தமிழ் நிரல் தொகுப்பை பரிசோதிக்கலாம் என்று காணமுடியும்.
முதலில் ஒப்பன் தமிழ் நிரல் தொகுப்பை நிறுவ வேண்டும் – இதற்கு ‘!pip3 install open-tamil’ என்ற கட்டளையை கொடுக்கவும். அடுத்து ‘play’ பட்டன் அழுத்தியோ அல்லது ‘Ctrl + Enter’ விசைகளை அழுத்திபயோ இவற்றை இயக்கலாம்.
மேல் உள்ள உதாரண நிரல் துண்டின் வரிகள் 1 முதல் வரி 6 வரை இருக்கின்றன. இதன் பயன்பாட்டினைக் கொண்டு இலவசமாக எந்த வித சிரிய நிரல்களையும் நீங்கள் இயக்கிட முடியும். ஓப்பன் தமிழ் போன்ற நிரல் தொகுப்புக்களை நீங்கள் எங்களது ஆவணக்கூருகள், மற்றும் உதாரணங்கள் மூலம் இந்த மேகக்கணிமை சேவையால் பரிசோதிக்கலாம்.
நன்றி