Today, we are releasing Open-Tamil v0.95 via Python package index here.

In this release there are few new items and routine improvements.
- Indian Rupee sign parsing
- Remove Python 2.x support with sunsetting from PSF
- Valai – package of web ReST API for some spellcheckers
Get the latest:
$ pip install --upgrade open-tamil
Thanks to all our contributors present and past.
Happy Holidays!
P.S: மின் அஞ்சல் அறிவிப்பு கீழ் இணைக்கப்பட்டது.
வணக்கம் தமிழ் கணிமை ஆர்வலர்களே, இன்று Open-Tamil வரிசை எண் 0.95 வெளியீடு ஆனது. இந்த நிரல் தொகுப்பு முற்றிலும் திறமூல MIT உரிமத்தில் வெளியிடப்பட்டது. இதனை கொண்டு நீங்கள் பைத்தான் கணினி மொழியில் தமிழ் மொழி ஆய்வுகளை செயல்படுத்தலாம். உதாரணமாக இரண்டு திறமூல சேவைகள்/செயல்பாடுகள் (அதாவது எழில், தமிழ்சந்தி மற்றும் தமிழ்பேசு-வலை என்பவற்றை தவிற்த்து [எங்கள் குழுவினர் அல்லாதவர்]) பயன்பாட்டில் பொதுவெளியில் உள்ளது தெரியவந்தது- 1) பைதமிழ் என்ற (அவலோகிதம் போல) வேண்பா திரிப்பு நிரல் தொகுப்பு (library), மற்றும் 2) வென்முரசு தோடர்நாவலை உரை-பகுப்பாய்வு செய்யவும் ஒரு செயலி என்றபடி உள்ளது. இந்நிலையில் இந்த வெளியீட்டில் உள்ளவை, 1. தமிழ்சந்தி என்ற விருது பெற்ற திருமதி. நித்தியா-திரு. சீனிவாசன் அவர்களது படைப்பான தமிழ் சந்திப்பிப்பிழைத்திருத்தி இந்த தொகுப்பில் இடம் பெற்றது. இதில் நாற்பது விதிகளுக்கும் மேல் சந்திப்பிழைகளை கண்டரிய வசதிகள் உள்ளது. 2. தமிழ் மோர்சு என்ற தந்தி குறிகளை தமிழில் கையாள இது உதவுகிறது. 3. வலை என்ற நிரல் தொகுப்பில் திரு. நீச்சல்கீரன் அவரது வாணி மற்றும் தமிழ்பேசு சொற்பிழை திருத்தியை இணையம்வழி கையாள வசதிகள் உள்ளன. முழு விவரங்களுடன் வெளியீடு: https://ezhillang.blog/2019/11/20/open-tamil-v0-95/ ஒப்பன் தமிழ் குழுவிற்காக, அன்புடன் -முத்து கலிபோனியா