சமிபத்தில் Yahoo குழுமங்கள் சேவை நிறுத்தப்படுவதாலும் அங்கு உள்ள பல வரலாற்று நோக்கில் சுவாரசியமான உரையாடல்கள், முக்கியமான கருத்துக்கள், அனைத்தையும் ஆவணப்படுத்தி செய்வது முக்கியமாக அமைந்ததுள்ளது.
இதை அணுகுவதில் 1980-90-களில் இருந்த தமிழ் எழுத்துரு வழி உள்ள குறியீடுகளும் [font-based encoding] அதன்பால் உள்ள சிக்கல்களும் நிற்கின்றன. இவற்றை தரப்படுத்தி தமிழில் ஒருங்குறி [unicode] வழியில் சேமித்தால் இந்த தரவுகளை முறைப்படி சேமித்தும், பரிசோதித்தும் பார்க்கலாம் என்பது இலக்கு.
முதலில் இதனை நண்பர் ஒருவரிடம் வழி இந்த செய்தி வந்தது- அதில் உள்ள இந்த மாதிரி உரையை டுவிட்டரில் இட்டேன். மேலும் சற்று சிறிய பரிசோதனையில்சட்டென்று குறியீடை அடையாளம் காண முடிந்தது.இது ஒரு ஓப்பன் தமிழ் மற்றும் எங்களது பங்களிபாளர்களின் மொத்த ஒரு வெற்றி என்றும் தோன்றுகிறது.
ஓப்பன்-தமிழ் தொகுப்பில் இந்த வேலையை பரிசோதித்து பார்த்தால் கீழ்கண்டபடி நிரல் இடலாம்:
# This code is in Public Domain. | |
# It requires installation of Open-Tamil module from Python Package Index. | |
# Currently Tamil text is saved in Unicode format but it wasn't always like this. | |
# If you have some of the old encoding formats like TAM, TAB, ISCII etc. you can | |
# use the encoding converters from Open-Tamil (inspired by ones from Suratha, and late Gopi of HiGopi.com) | |
# The following code demonstrates the decoding process | |
# using an intensive search algorithm written by Arulalan, T. | |
import tamil | |
data="""¸¡Äõ ºïº¢¨¸Â¢ý Å¡Øõ ¾Á¢ú: ¾Á¢úôÒò¾¸í¸Ç¢ý Å¢üÀ¨ÉÔõ ¸ñ¸¡ðº¢Ôõ | |
ãýÈ¡õ ¬ñÎ ÌÁ¡÷ ã÷ò¾¢ ¿¢¨É×ô§ÀÕ¨Ã: ¦¾Ç¢Åò¨¾ §Â¡ºô""" | |
print(tamil.txt2unicode.auto2unicode(data)) |
மேலும் தமிழில் இயங்கும் பலர் தங்களது வேலைகளில் உள்ள தமிழ் செயலிகளும், அதன் திறன்களில் இதே போன்ற சிக்கல்களை தீர்வடையலாம் என்று தகவல் தெறிவித்தனர்; அவையாவன:
- சுரதா அவரது தமிழ் உரை மாற்றி
- நீச்சல் அவரது தமிழ் எழுத்து எழுத்துசீராக்கி
- nhm-ரைட்டரில் 2007-இல் இருந்து இந்த சேவை இருப்பதாக அவர்கள் தெரிவித்தார்கள்.
ஆனால் இன்று எளிதாக பொதுவில் இதனை உங்கது ஆவணமாக்கம் தேவைகளுக்கு ஓப்பன்-தமிழிலும் பயன்படுத்தலாம்.
நன்றி.