தமிழ் செயற்கையறிவு மற்றும் எந்திர வழி உரை பகுப்பாய்வு போன்ற செயல்பாடுகளின் திறன் தினமும் வளர்ந்து கொண்டே போகின்ற சமயத்தில் (செயற்கையறிவு என்ற பேரலையின் முதுகில் பயணிக்கின்றது என்றபடியாக) இவற்றினால் கடக்கவேண்டிய சில புதிர்கள் என்ன (என்பார்வையில்) என்று இந்த பதிவில் அலசலாம்.
- இருபால் சமநிலைப்பாடுத்தல் (gender balanced text)
- அரசாங்கம், வணிக கார்ப்ரேட் நிறுவனங்கள் தினசரி புழக்கத்தில் பல செய்திகள் விளம்பரப்படுத்தலுக்கும், உள்நிறுவன செயல்பாட்டிற்கும் பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கும். இத்தகைய செய்திகளில் சில் கேள்விகள் எழுகின்றன:
- இந்த செய்திகள் முழுவதும் இருபாலினருக்கும் சரிசமமாக பாரபட்சமின்றி எழுதப்பட்டுள்ளதா?
- இப்படி இல்லாவிட்டால் செயற்கையாக உரைதிருத்தம் செய்து இருபால் சம நிலைப்படுத்தல் செய்யலாம ?
- உதாரணம்: “பணியாளர் வேலைக்கு வந்தால் அவர் மனைவியிடம் ஒப்புதல் பெற வேண்டும்..” என்ற படி ஒரு உரை இருந்தால் அது சமனிலைப்படுத்தப்பட்டபின் “பணியாளர் வேலைக்கு வந்தால் அவர் மனைவியிடம் (அல்லது அவள் கணவனிடம், [துனைவன்/வியிடம்]) ஒப்புதல் பெறவேண்டும்” என்று வரவேண்டும்.
- இத்தகைய ஒரு செயற்கையறிவு அல்லது தானியங்கியிடம் திருக்குறள் மற்றும் சம்காலத்தில் உருவாகாத பழங்கால உரைகளைக்கொடுத்தால் என்ன ஆகும் ?
- அரசாங்கம், வணிக கார்ப்ரேட் நிறுவனங்கள் தினசரி புழக்கத்தில் பல செய்திகள் விளம்பரப்படுத்தலுக்கும், உள்நிறுவன செயல்பாட்டிற்கும் பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கும். இத்தகைய செய்திகளில் சில் கேள்விகள் எழுகின்றன:
மேலும் சில திறன்களை தமிழ் இயல்மொழிபகுப்பாய்வு பெரும் என்றும் நம்பலாம்; அடுத்தகட்ட கேள்விகள் / புதிர்கள் அடுத்த பதிவில்.
நன்றி
-முத்து
One thought on “தமிழ் உரை சம்பந்தமான சில புதிர்கள்”