தமிழ் கணிமையில் பல கட்டுரைகள் வருகின்றன – அவற்றில் சில கட்டுரைகள் ஒரு முற்றிலும் வேறுபட்ட சிந்தனைகளை முன்வைக்கும்; பல கட்டுரைகள் முன்னோர் சென்றவழியில் எளிதாகவும், சிறப்பாகவும், சிக்கனமாகவும் (கணினியளவில்) மற்றும் பொருளாதார, நுகர்வோர் அணுகுமுறை என்றபடியாக உள்ள புதுமைகளை விளக்கும்.
இந்த சில கட்டுரைகள் செல்லாத இடத்திற்கு, முற்றிலும் வேறுபட்ட சிந்தனைகளை முன்வைப்பவைகளில் சிலவற்றைப்பற்றி இன்று பார்க்கலாம்.

தமிழ்-99 விசைபலகைக்கு ஒரு மேம்பாடு என்ற படியாக 2004-இல் நடந்த தமிழ் கணிமை மாநாட்டில் இந்த (clj-thamil படைத்த இளங்கோ சேரன் குழுவினரால்) கட்டுரை “Optimization of Thamil Phonetic Keyboard.” இதில் ஆசிரியர்கள் கூறியதாவது, தமிழ்-99 விசையில் மெய்களுக்கு பதில் அகர-மெய்களை விசைப்பலகையில் பொருத்தினால் சிக்கனமாக (விசை தட்டச்சு செய்யும் எண்ணிக்கையில் குறைவாக) ஒரு குறிப்பிட்ட உரையை இந்த மாற்று விசைப்பலகையில் உள்ளீடு செய்யலாம் என்று கண்டெடுத்தார்கள். ஆனால் இதை உள்வாங்கி எதுவும் செய்யவில்லை.

அடுத்த கட்டுரைக்கு மேர்கோள் என்க்கு கிடைக்கவில்லை, KaReFo-குழுவினரால் “iTamil,” (2016) ; ஆனால் அதன் சாராம்சமாவது தமிழின் உயிமெய் எழுத்து வடிவத்தை முற்றிலுமாக மாற்றியமைக்க ஒரு ஆய்வு பரிந்துரை சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் இந்த கட்டுரை 2016-ஆம் ஆண்டு நடந்த தமிழ் கணிமை மா நாட்டில் வாசிப்பு பெற்றாலும் அது பின்னர் நீக்கம் ஆயிற்று – காரணம் இதனை ஆய்வளவில் கூட தமிழ் சமுகம் ஏற்கக்கூடாது என்றோரு தரப்பின் வாதம் வெற்றி பெற்றதன் காரணம். இந்த சர்ச்சைக்கும் அப்பால் அவர்கள் சொன்ன கோரிக்கை, ஆய்வுகளை பார்க்க இந்த செய்தி உபயோகரமாக வரலாற்று சின்னமாக அமைகிறது.
ஆய்வுக்களத்தில் சிந்திக்கலாம்தானே! அதை நடைமுறைப்படுத்தவேண்டுமானால்தானே மேலும்/கூடுதல் விவாதங்கள் தேவை? சிந்தனையே தடைசெய்யப்படவேண்டுமெனில் தமிழருக்கும் தலிபனார்களுக்கும் வித்தியசமென்ன?