
“கிடைப்பதெல்லாம் புளிப்பான எலுமிச்சைதான் என்றால் அதில் சிறப்பான எலுமிச்சைசாறு குளிர்பானத்தை செய்யும்,” என்பது அமெரிக்க நடைமுறை. இதனை மிகையாகக் கொண்டு பிரபல இசைபாடகி பியான்சே ஒரு முழு பாடல் தொகுப்பையே, Lemonade என 2016-இல் வெளியிட்டாள். அதில் கருப்பினத்தின் மீது போலிசார் வழி நடத்தும் அமெரிக்க அடக்குமுறையை கடுமையாக விமர்சித்தும் பாடினாள் பியான்சே – அவள் மால்கம்-எக்ஸ், கருப்பு சிருத்தைகள் என்றெல்லாம் அவர்களது வரிகளில் பூந்து ஒரு ஆதங்கத்தை கலைவடிவு படுத்தினாள்.

அதெல்லாம் சரி. தமிழில் சிறப்பாக livestream/videoconference வழி (இயங்கு + அலை = இயங்கலை) வழி ஒரு மாநாட்டை இந்த பேரிடர் காலத்தில் நடத்துவது என்பது இங்கு நமக்கு நடந்த ஒரு லெமனேட் என்று காணலாம். என்னதான் கொரோனா நுண்கிருமி தொற்று நோய் பரந்தாலும் நாம் சோர்வடையாமல் நமது affirmations-ஐ நினைத்தபடி முன்னெடுத்துச்செல்வது முக்கியமாக அமைகிறது.
மாநாடு மலர் வெளிவரயிருக்கிறது. மாநாடு சிறப்பாக நடைபெற பலரும் அயராது உழைத்தனர் – முதன்மையாக இருவர்: இளந்தமிழ், மற்றும் சீனி. இதில் பங்கேற்றுதும், அருகாமையில் இருந்து சிறிய குழுவின் சாதூரியமான செயல்பாடு, அடுத்த தலைமுறையினரின் அதீத ஈடுபாடு என்பதையும் சிறப்பாக தமிழ் கணிமைக்கு விளங்கும் என்பது புலப்படுகிறது. இனி தமிழ் மெல்ல வாழும் என்பதும் புரிகிரது.
மாநாடு காணொளிகள் இங்கு youtube-இல் காணலாம்: (கீழ் உள்ள வீடியோ வேலைசெய்யவில்லை எனில் இங்கு காண்க)
“மலேசிய உத்தமம், ஓம்தமிழ் ஏற்பாட்டில், கணியம் அறக்கட்டளை, தித்தியான் டிஜிட்டல், மொசில்லா தமிழ் குழுமம், உபுண்டு தமிழ் குழுமம், தமிழ் லிப்ரெஓபிஸ் இணை ஏற்பாட்டில் 4 – 5 ஜூலை 2020 அன்று, உலகின் முதலாவது கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு” இணையம்வழி ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆன்டிராய்டு, பைதான், மொசில்லா, இணையப் பாதுகாப்பு, கணினி மொழியியல், கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு, பொருட்களின் கணினி போன்ற தலைப்புகளில் கணிஞர்கள் படைப்பினை வழங்கினர். சில படைப்புகள் பட்டறைகளாக நடத்தப்பட்டது.
INFITT MALAYSIA & OMTAMIL with KANIYAM FOUNDATION, PROGRAM TITIAN DIGITAL, MOZILLA TAMIL GROUP, UBUNTU TAMIL GROUP, TAMIL LIBREOFFICE organised World’s First in Tamil “Open Source Technology Conference” via online on the 4th & 5th of July 2020.”