2021

இணைமதி எழுத்துரு கொண்டு செய்யப்பட்ட தமிழ் அரிச்சுவடி

புத்தாண்டில் பல புதிய வாய்புகள், சந்தர்ப்பங்கள் காத்திருக்கின்றன; நமது திறன்களை வளர்த்துக்கொள்ளவும் வாய்ப்பு உண்டு; சென்ற ஆண்டில் நடப்பில் குறைபாடுகளையும் சீர்மைசெய்ய வாய்ப்பு உண்டு. இன்று எனது பார்வையில், எழில் மொழி அறக்கட்டளையின் பணிகளானது தொடர்ந்து இந்த ஆண்டில் நடைபெரும்:

  1.  சில சிக்கலான தமிழ் மொழிபெயர்ப்புகளை முடிப்பது (compiler பற்றிய கட்டுரை, தமிழில் அல்கொரிதம் பற்றியும் தகவல் தரவமைப்புகள் பற்றியும் புத்தகங்கள்).
  2. நிரல் அளவில் இரண்டு அல்லது மூன்று ஓப்பன் தமிழ் வெளியீடுகளை ஏற்பாடு செய்வது
  3. புதிய திட்டங்கள் அளவில் விட்டர்பீ அல்கொரிதத்தின் வாயிலான தமிழ் சொல்திருத்தி செயல்பாட்டிற்கு தீர்வு காணுதல்.

புடிச்சா புளியங்கொம்பு; முயற்சிகள் வீண்போவதில்லை. சவால்களை சந்திப்போம்.

அன்புடன்

-முத்து