தமிழாக்கம் – அல்கோரிதம் நூல்

காரணிகள்

கணினி நூல் வரிசையில் அல்கோரிதம் நூல் ஒன்று எழுத நேரமில்லை என்றாலும் ஆங்கிலத்தில் உள்ள நூலை தமிழாக்கம் செய்ய வேண்டும் என்பது ஒரு நீண்ட நாள் இலக்கு; முக்கியமாக ஏன் செய்ய வேண்ட்டும் என்றால்,

 1. தமிழ் வழி கணிமை பயில்பவர்களுக்கும் தமிழ் வழி கணினி நிரலர்களிடையே வளமான உரையாடல்களை ஊக்குவிப்பது – மாணவர் கணிமை கல்வி
 2. தமிழில் உள்ள கணிமை படைக்கும் மொழியியலை வலுப்படுத்துவது – அறிவியல் தமிழ் பங்களிப்பு
 3. “எழில் – தமிழில் நிரல் எழுது,” மற்றும் “ரூபி நண்பன்” போன்ற நூல்களுடன் இணைப்பாக அடுத்த கட்ட நூல் ஒன்றை வெளியிட ஒரு முயற்சி – அடுத்தகட்ட வளர்ச்சி

பிராட்பீள்டு கணினி அல்கோரிதம் நூல் (Bradfield CS Textbook)

தமிழில் இந்த நூலை கொண்டு வர முயற்சிகள் எடுக்கிறோம்;

இந்த திட்டத்தைப்பற்றிய விவரங்கள் கீழே காணலாம்:

தகவல் தரவமைப்பும் அல்கோரிதம் – படிநிலை செயல்முறை

சில தேவைகள்

 1. DS&A in Tamil
 2. பொது உரிமம் – -cc-by-sa
 3. புதிய புத்தகமா இல்ல மொழி பெயர்ப்பா?
 4. 16 வயது மேற்பட்டவர்கள் படிக்கும் வகை இருக்கவேண்டும்
 5. தமிழபடுத்தப்பட்ட கலைச்சொற்கள்

அட்டவனை [table of contents]

 1. Analysis (அல்கொரிதம் திறணாய்வு)
 2. Stacks (அடுக்கு தரவமைப்பு)
 3. Queues (வரிசைத் தரவமைப்பு)
 4. Dequeus (“decks” என்று வாசிக்கவேண்டும் – double-ended queue – அதாவது இருதிசை வரிசைகள்)
 5. Lists (பட்டியல் தரவமைப்பு)
 6. Recursion (அடுக்கு நிரல்படுத்தல்)
 7. Searching (தேடல் அல்கோரிதங்கள்)
 8. Trees (இருகிளை மரம் தரவமைப்பு)
 9. Graph (முனை-ஓரம் தரவமைப்பு)

காண்க: GitHub – Ezhil-Language-Foundation/algos: “கணினி தரவமைப்புகளும் செயல்முறைகளும்”- “Algorithms and Data Structures” புத்தகத்தின் தமிழாக்கம்

சுட்டி: https://github.com/Ezhil-Language-Foundation/algos

இதில் ஆர்வமுள்ளவர்கள் எந்த அத்தியாயத்தை மொழி பெயர்க்க ஆசையாக உள்ளீர்கள் என்றும் எனக்கு தெரிவிக்கவும். உங்களால் எவ்வளவு நேரத்தில் இதை செய்யலாம் என்றும் சொல்லவும்.

ஏற்கணவே உள்ள நூல் நடையில் தமிழ் கலைசொற்கள் இருக்க வேண்டும். “தமிழில் நிரல் எழுது,” மற்றும் “ரூபி நண்பன்” என்ற நூல்களை (திறமூல நூல்கள்) பற்றியும் நடை உதாரணமாக காணலாம்.

நன்றி

முத்து