பல ஆண்டுகளாக மூல நிரல்களை திரட்டி, projectmadurai.org என்ற வலை தளத்தில் ஒரு தமிழ் மொழிக்கு அரிய சேவையாக கிடைக்கும். இதனை Android செயலியாக அனைவரும் offline இணையம் வசதி இல்லாமலே படிக்கும் வகையில் செய்தால் என்ன என்று என்னினேன். இதன் விளைவே மின் மதுரை.
"மின் மதுரை" செயலி உங்கள் திறன் பேசி (smart phone) அல்லது சிலேட்-கணினியில் (tablet) இருந்து "மதுரை திட்டம்" என்ற மின் நூலகத்தை எங்கும் படிக்கும் வகையிலும் உதவுகிறது. இந்த செயலி மதுரை திட்டம் என்ற இணையம் வழி உருவாகிய தமிழ் செவ்வியல் நூல்களின் தொகுப்பை ஒருங்கிணைத்த மின் நூல்களை மறு படைப்பாக ஆண்ட்ராய்டு தளத்தில் அளிக்கிறது. மதுரை திட்டம் (பார்க்க www.projectmadurai.org) வழங்கிய நூல்களையே இங்கு படிக்கலாம்; இந்த மதுரை திட்டத்தை உருவாக்கிவர்களுக்கும், இந்த நூலகத்தில் இடம் பெற்ற தமிழ் எழுத்தாளர்களுக்கும், 300-இக்கும் மேற்பட்ட தமிழ் பணி செய்த தமிழ் ஆர்வலர்களுக்கும் எங்களது நன்றிகள்! வாழ்க வளமுடன்.
இன்று இந்த செயலியின் நிரல்களை வெளியிடுகிறேன். இதனை மேம்பாடு செய்து இந்த ஆண்டு Google Android Play சந்தையில் வெகுஜன மக்கள் எல்லோரும் பயன்படுத்தும் வகையில் வெளியிடுவோம். மூல நிரல் github-இல் இங்கே
அதன் வரை உங்களுக்கு இந்த மூல நிரலை உபயோகம் செய்து மேம்பாடு செயதால் எனக்கு மின் அஞ்சல் அனுப்புங்கள்.
நன்றி.