அசட்டுத்தனம்

குழந்தைகளை அது-இது என்று persona-non-grata வாக ஏன் தமிழர்கள் நடத்துகிறோம் ?

இந்த தகவல் எல்லாம் சும்மா வட்சப் பல்கலைல போட்டுவிடலாமே:

தோசை போல் இல்லை பான்கேக்

“தோசையம்மா தோசை,

அம்மா சுட்ட தோசை,

அரிசி மாவும் உழுந்து மாவும் கலந்து சுட்ட தோசை,

அப்பாவுக்கு இரண்டு,

அம்மாவுக்கு இரண்டு,

பாப்பாவுக்கு இரண்டு,

தின்ன தின்ன ஆசை,

இன்னும் கேட்டால் பூசை!”

குழந்தைகள் பாடல் (பொது தமிழுடைமை)

மாவை கரைத்து சூடான கல்லில் ஊற்றினால் புஸ்-என்று தோசையும், பான்கேக்கும் வருவதுதானே – அதில் என்ன ஒரு பெரிய ஆச்சரியம் என்று கேட்கிறீர்களா ? உண்மை ஒன்றுமில்லைதான். ஆனால் அமெரிக்காவில் குடிபுகுந்து பல பத்தாண்டுகள் தாண்டியும் எனக்கு சரியாக பான்கேக் (இங்குள்ள IHOP, Denny’s, Diner போல) வீட்டில் செய்யவராதது ஒரு வருத்தமாகவே இருந்து வந்தது – அதாவது 2022 வரை.

தோசை மாவு என்பது புளித்த அரிசி உளுந்து மாவில் செய்யப்படுகிறது ஆகையால் அதில் ஒருவகையான நுரைச்சல் தனாகவே இருக்கிறது. (Leavened by fermentation). ஆனால் பான்கேக் மாவு என்பது புளிப்படையாத ஒன்று (unleavened); அதில் நுரைச்சல் இல்லை. இது புறிவதற்கு ஒரு வயது சிலர்க்கு தேவையாகிறது 🙂

பகுதி நேர எடுபடி ஆட்களுடன் வளர்ந்த வீடுகளில் உள்ள பிள்ளைகள் போல் நானும் பள்ளிக்கு செல்லும் நாட்களில் கட்டுசாதம் கொண்டுசெல்வது வழக்கம் – அதுவும் அம்மாவிற்கு அடுப்படியில் சின்னச்சின்ன உதவி வேலைகள் செய்வதும் பழகியது – (இன்னும் ரசம், புளியைகரைத்து ஒரு குழம்பு வைக்க கைவளயவில்லை) – அப்பொழுது அழகான ஒரு சிறிய இறும்புக்கல்லில் தோசை, ஊத்தாப்பம், முறுகல் தோசை, முட்டை தோசை என்றெல்லாம் பழகிக்கொண்டேன்.

ஊர் மாறி வந்ததும் என்னமோ இந்த பான்கேக் சனியன் கடைகளில் பஞ்சு மெத்தைப்போல உள்ளது நமது கைவரிசைக்கு வீட்டில் செய்ய வரவில்லை என்ற ஒரு மோகம்; என்னென்னமோ பண்ணிப்பாத்தாச்சு; அதிக எண்ணை; அதிக வேகும் நேரம்; கூட்டிக் குறைத்து நீர் விட்டு மாவை கரைப்பது, இறும்புக்க் கல், டெப்ளான் கல், வெப்பம் கூட்டுதல் / கூட்டிக்குறைத்தல், எல்லாம் ஒன்றும் வேலைக்காகவில்லை; தீஞ்ச விராட்டி மாதிரியான பான்கேக்குகளே மிச்சம். அதில் மனதை தேத்திக்கொண்டு கூடுதல் வெண்ணெய், சர்க்கரை/மேப்பில் பாகை ஊற்றி உண்பேன்; மனைவிவரும் வரை. அதன்பின் சற்று நமது தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டுமல்லாவா என்ற எண்ணம், மற்றும் “இதை ஏன் சாப்பிட்ற”ங்கிற எதிர்ப்பை நேரிட்டேன் 🙂

இணையத்தில் தான் இறைவனும் இருக்கிறாரல்லவா ஆகையால் சற்று போட்டுப்பார்த்தபின் அதன்படி தோசையை தடவியது போல் மாவு ஊற்றுவது தான் பான்கோக் ஊற்றும் பொழுது ஆன தவறு என்று உணர்ந்தேன். திடமான cast-iron இறும்புக்கல்லில் கூட்டிக்குறையாத ஒருதிடமான சூட்டினில் வெண்ணெய் விட்டு அழகாக லட்டுலட்டாக கரைத்த மாவை (தடவாமல்) ஊற்றினால் பஞ்சு மெத்தை போல் வரும் பான்கோக்கை எடுக்கலாம்.

இதை எல்லாம் பெரிய பீத்தலாக சொல்லமுடியாது எனினும் ஒரு அமெரிக்கராகும் வழியில் இருக்கும் சில வழித்தடைகளை உடைத்தெறிந்தது போல் ஒரு எண்ணம். தோசை மெறுகெடுத்து பான்கேக்கானதாக ஒரு எண்ணம் – ஆனால் தோசை இல்லாவிட்டால் பான்கேக்கின் அருமை நமக்குத் தெறிந்திருக்குமா ?

-முத்து