எழில் மொழிச் சொற்கள்

”எழில்” மொழியில் பயன்படுத்தப்படும் சொற்கள் (Keywords)பற்றிச் சமூக வலைத்தளங்களில் பல கருத்துகளைக் கேட்கிறோம். சிலருக்குச் சில சொற்கள் பிடித்துள்ளன, ஆனால் வேறு சில சொற்கள் பிடிக்கவில்லை, இவற்றை இன்னும் எளிமையாக, எல்லாருக்கும் புரியும்வண்ணம் மாற்றலாமே என்று கருதுகிறார்கள்.

இதுபோன்ற கருத்துகளை ஒரே இடத்தில் தொகுக்கலாம் என்ற எண்ணத்தில் இந்தப் பதிவை எழுதுகிறோம்.

”எழில்” மொழியில் உள்ள சொற்களின் பட்டியல் (உரிய ஆங்கிலச் சொல்லுடன் சேர்த்து) கீழே தரப்பட்டுள்ளது. அதுபற்றிய உங்கள் கருத்துகளை அறிய விழைகிறோம்.

ஒவ்வொரு சொல்லுக்கும் ‘நன்றாக உள்ளது’, ‘நன்றாக இல்லை’, ‘இதை இப்படி மாற்றலாமே’ என்ற மூன்று வாய்ப்புகள் தரப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். நீங்கள் வேறு நல்ல சொல் என்று நினைப்பவற்றைப் பரிந்துரை செய்யுங்கள். (உங்களிடம் தமிழ் தட்டச்சு வசதி இல்லாவிட்டாலும் பரவாயில்லை, நீங்கள் ஆங்கில எழுத்துகளிலேயே மாற்றுச் சொற்களைப் பரிந்துரைக்கலாம்)

இப்படிச் சேகரிக்கப்படும் மாற்றுச் சொற்களைத் தொகுத்து, பெரும்பான்மை மக்களின் கருத்து, “எழில்” உருவாக்கக் குழுவின் சிந்தனைகள் அடிப்படையில் வேண்டிய மாற்றங்களைத் தீர்மானிப்போம்.

உங்கள் கருத்துகளுக்கும் உதவிக்கும் மிக்க நன்றி. “எழில்” மொழிக்கு இன்னும் எழில் கூட்டுவோம்!

இந்த வாக்கெடுப்பில் பங்கேற்பதற்கான இணைய முகவரி: http://www.surveymonkey.com/s/BPRBRDS