மக்கள் செல்வன் சொல் தேடல்
சொல் தேடல்
விடைகள் தேவையா ? ஈசிதாங்க! நீங்களும் முயற்சிக்க இங்கு http://tamilpesu.us/
விடைகள் தேவையா ? ஈசிதாங்க! நீங்களும் முயற்சிக்க இங்கு http://tamilpesu.us/
சென்ற மூன்று மாதங்களாக எனது முழுநேர அலுவலக வேலையில், தமிழில் [தமிழ் இடைமுகத்தில் மட்டும்] Microsoft Outlook, Office செயலிகளை தினமும் வேலை நெருக்கடியில் பயன்படுத்தி ஒரு தமிழில் செயல்படும் ஒரு முழுநேர அனுபவத்தை நேர்கிறேன். இதே வேளையில் வீட்டில் திற மூல மென்பொருள் பங்களிப்பிற்கும், திட்டமிடுதல், கட்டுரை, குறிப்புகள் ஆகியவற்றிக்கும் Open Office பயன்படுத்தி வருகிறேன். இதற்க்கு சிறிதளவாவது காரணம் அழகாக தமிழில் பேசி படைத்த செல்லினம் செயலியை வெளியிட்ட, முரசு அஞ்சல், முத்து நெடுமாறனின் “கருவாக்கல், உருவாக்கல், விரிவாக்கல்” என்ற தமிழ் இணைய மாநாடு 2017-இன் போது கேட்ட பேச்சு – அவர் “நாம் தமிழில் இடைமுகங்களை செயல்படுத்தினால் நம்மளுடைய மொழி பற்றி மாதவர் கேட்பார்கள், நமது மொழிக்கும் விளம்பரம் கிடைக்குமே!” என்பது போல் பேசினார்.
இதே போலே எனது சீன வேலை-நண்பர் [இது முற்றிலும் ஒரு வேடிக்கையான “தெரிந்தவர் -ஆனால் நண்பர் அல்ல” என்பதற்கு அமெரிக்கர்கள் கூறும் நாசூக்கான சொல் என அறிவேன்] “என்ன இந்தியன் மொழி இது?” என்றும் கேட்க – [பாவம் அவருக்கு ஆரியம்-திராவிடம் போன்ற மொழிகள், 1500 கூடுதலான மொழிகள் பற்றியெல்லாம் பேசி பாடம் நடத்தாமல்] தமிழ் என்று சொல்லி “இந்தியாவில் இல்லை, சிங்கப்பூரில் சீன மொழிக்கு நிராக இருக்கு” என்றும் சொல்லி, அவரது பெயரை தமிழில் எழுதி அனுப்பினேன். தமிழ் இடைமுகம் பயன்படுத்தினால் அதற்கும் ஒரு மதிப்பு, தனித்துவம்!
இந்த பதிவில் எனது Microsoft Office, Open-Office பற்றிய அனுபவங்கள் குறித்து எழுதுகிறேன்.
அழகிய மென்பொருள், beautifully crafted software, ஒரு திரைப்பட காதல் கட்சியில் எப்படி காதலன்-காதலி சேர்கின்ற நொடியில் (படம் பார்ப்பவரின் பார்வையில் இயக்குநர் மறைந்து இருப்பதுபோல்), வேலைக்கும் வேலைசெய்யும்ப-யனர் இடையே ஊடுறுவாமல் பின்புலத்தில் இருக்கவேண்டும். இதனை சரியே செய்யும் இடைமுகம் நல்ல மென்பொருள்; இத்தகைய தமிழாக்கம் கொண்ட இடைமுகம் இவ்வாறே ஊடுறுவாமல் இருக்கவேண்டும்.
உண்மையில் Microsoft நிறுவனத்தின் தமிழாக்கம், (l10n – [localization-இக்கு இட்ட சுருக்கம்]), மிக எளிமையாக உள்ளது. இதனை கையாண்ட குழு நல்ல வேலை செய்தார்கள். சில default-கள் அபத்தமாக இருந்தாலும் பெரும்பாலும் ஓரளவு தமிழ், தமிழ் கணிமை கலைச்சொற்கள், எதார்த்தமாக தமிழில் புழங்கும் ஒரு சாமானியன்/யர், இதில் எளிதாக இயங்கும் வகையில் அமைந்தது!
முதலில் Open Office இடைமுகத்தை தமிழில் தந்த ழ-கணினி-குழுவிற்கு நன்றி. Open Office இடைமுகம், உண்மையில் ழ-கணினி திட்டத்தில் வழி தன்னார்வலர்களால் வெளியிடப்பட்ட மொழியாக்கம் – மிக பாராட்டத்தக்கது ஆயினும், Microsoft நிறுவனத்தின் மென்பொருளுக்கு இணையாக இல்லை. நிறைய பிழைகள் – “text fields” என்பதை வயல்கள் என்றும் ஓரிடத்தில் தவறாக மொழி பெயர்க்கப்பட்டது. இவ்வாறு சில வேறுபாடுகளும், தரம் சார்ந்த வகையில் முன்னேற்றங்கள் தேவைப்படுகின்றன. நான் ஒன்றை மட்டுமே இங்கு குறிப்பிட்டாலும், நீண்ட நாள் திற மூல பயனாளர் என்பதனாலும் இதில் கருத்து வேறுபாடுகள் கிடையாது.
இதே நேரத்தில் மற்றோரு மென்பொருளையும் இவற்றோடு ஒப்பிடவேண்டும்; தமிழில் சிறந்து விளங்கும் “மென்தமிழ்” ஆவண திருத்தி (Word processor) முழுமையும் தமிழ் மொழியியல் கொண்டு, சிறப்பாக பேரா. திரு. தெய்வசுந்தரம்நயினார், அவர்களது தலைமையில் வெளியிடப்பட்டு வருகிறது. இதற்கும் அவரது பல தமிழ் கணினி மொழியியல் பங்களிப்பிற்கும் அவருக்கு 2015-ஆம் ஆண்டு தமிழக அரசு கணினி விருது அளித்து சிறப்பிக்க பட்டார். இந்த மென்தமிழ் திருத்தியை சில நேரம் மட்டுமே பயன்படுத்தியதால் நான் இதற்கு தற்போது ஒப்பீடுகள் கொடுக்க முடியவில்லை.
தமிழில் இடைமுகங்களை கிடைக்கும் இடங்களில் பயன்படுத்துங்கள்; இவற்றை பற்றி வெகுஜன இதழ்களிலும், வலை பதிவுகளிலும் இடுங்கள்; நண்பர்களுக்கும், குடும்பங்களுக்கும் சொல்லுங்கள். தமிழ் மொழியில் கணினியியல், கணினி இடைமுகவியல் (interface design) போன்ற துறைகளின் வளர்ச்சி விமர்சன பார்வைகள், பின்னூட்டங்கள், இல்லாவிடில் தேய்ந்து போய்விடும்; மறக்கப்படும். காற்றோடு தூசியாகிவிடும். இது மென்பொருள் வடிவமைப்பாளருக்கு நீங்கள் அளிக்கும் பரிசு.
நன்றி, முத்து (01/27/18: சான் ஓசே, கலிஃபோர்னியா)
அடிக்குறிப்பு : சில சொற்பிழைகளை திருத்தியுள்ளேன்
One of major achievements of last year has been collecting inputs from our team and writing up two important papers – one for historical review and other for collective call to action on great opportunity that is Tamil open-source software.
We also take time to thank all co-authors who have pulled together their efforts at short notice to make these research works happen! Together these two papers represent a value of tens of thousands of Indian rupees, or more in the making (going by estimates of other Tamil software foundations).
We also thank conference organizers for partial travel grant toward making this presentation happen. Thank you!
Ezhil, Open-Tamil conference articles – 2017 presented at Tamil Internet Conference, August, 2017, in Toronto, Canada. Both the papers were well received and good academic and development points were debated at the forum.
GitHub Tamil language repositories compared with other languages, as measure of software developers interest.
For questions and queries on these articles, please write to us at ezhillang@gmail.com or leave your comments below.
Ezhil Language Foundation
Language is *your* memory; if you ignore it, you will forget it. Language itself won’t be erased.
எழில் மொழியை சிறிது நகைச்சுவையுடன் எப்படி அணுகுவது ? நம்ம சூப்பர்ஸ்டார் சொன்ன பொன்மொழிகளை கொண்டும் இதனை மீம்ஸ் வழி செய்யலாமா ?
“பாட்ஷா ஒரு தரவை சொன்னா, நூறு தடவை சொன்ன மாதிரி” என்ற வசனத்தை எழில் நிரலாகா மாற்றலாம்
இந்த நாள் உங்களுக்கு இனிய நாள் ஆகட்டும்!
-முத்து
விக்கிபீடியா – வெற்றி நடை!
தமிழ் கணிமை எப்போதுமே வளர்ந்து கொண்டே போகுமா ? இந்த வாரம் விக்கிப்பீடியா தமிழ் திட்டத்தில் 1 இலட்சம் கட்டுரைகளை எட்டியது. விக்கிபீடியா பங்களிப்பாளர்களுக்கும் தனி-தமிழ் (நா லேதண்டி) ஆர்வலர்களுக்கும் வாழ்த்துக்கள்!
ஒதுக்கப்பட்ட கோணம்
தமிழ் திறமூல திட்டங்கள் என்பது அக்ஷயப்பாத்திரம் கிடையாது; எங்களது நிலை பற்றி எனது ( opinionated ) கோணம்.
ஒரு பரிபால அமெரிக்க ராப் கலைஞர் ஜே.சி “Heaven” என்ற பாடலில் கேட்கிறான்,
“Question religion, question it all
Question existence until them questions are solved”
இதற்கும் சாதாரணமாக தமிழ் கணிமை பத்தி எழுதும் இந்த வலைப்பூவில் என்ன சம்பந்தம் ? அதில் காண்டாமிருகம் எங்கே என்பதற்கும் தலைக்கும் காலுக்கும் முடிச்சு போடுறது என்ன ? நீங்களே சொல்லுங்கள்.
படம் : திருத்தியுடன் எழில் மொழி செயலி; நிரல் இடது பக்கம், இயக்கிய வெளியீடு வலது பக்கம். சாளரத்தின் கீழ் இயக்கிய விவரம். இந்த செயலி எழில் படிக்க உதவும். (c) 2017 எழில் மொழி அறக்கட்டளை.
“எழில் மொழியை எப்படி வெளியீடு செய்வது ?” என்று சப்பென்று தலைப்பை வைத்து மேலும் ஒரு பதிவை எழுதலாம் என்று தொடங்கினேன். அனால் இன்று எனக்கும் பொறுமைக்கும் நீண்ட தூரம் ஆயிற்று. நம்ம மண்ணில் ஜே.கே. போன்றவர் இருந்ததாக கேள்வி, என்னமோ அவர் ஆசியில் ஒரு தலைப்பு. சில வெளிப்பாடுகள் அதுவாக வரவேண்டும், ஸ்வயம்பு போல.
“ஆளே இல்லாத கடையில ஏண்டா டீ ஆத்தூர்?” நக்கலுக்கு தமிழ் எந்த மொழியிர்க்கும் சளச்சது இல்லை. சிலர் நேரில் என்னை, சற்று வெகுளி தனமாக – இங்கு அமெரிக்காவில் முதல் தலைமுறை தமிழர் (எழுதவோ, நல்லா பேசவோ சாகஜமாக வராதவர்) – “ஏன் நீங்கள் தமிழில் மென்பொருள் ரீதியில் செயல்படுகிறீர்கள்” என்று கேட்டார்; என்னமோ செவ்வாயில் குடிபுகுவது போல நான் செய்யும் வேலைகள் எனது நண்பர்களிடமும், முகம் அறியா இணைய நபர்களிடமும் தெரியும். தமிழில் செயல்படுவது எனது சுய உறிமை, சில நேரம் பெருமை, தன்னிரக்கம், அகராதி என்றும் பலர் கூறலாம்; ஆனால், அதில் சமூக பொறுப்பு, அறிவியலாளரின் சமூக பார்வை, அறிவியல் மொழி வளர்ச்சி, தேடல், தொழில்நுட்ப கண்டெடுப்பு, தியானம் போன்ற நுட்ப்பமான விஷயங்களை மறந்து விடுவார்கள். சில நேரங்களில் எழில் எங்கே போகிறது என்று எண்ணுவேன்; ஆனால் முதலில் அந்த எட்டு வயது குழந்தைகள் நிரலாக்கத்தை தமிழ் வழி கற்பிக்கும் பொது தமிழ் கணிமை உலகம் நாம் அனைவரும் கூடி கண்ட வெற்றி என்பதில் ஐயமில்லை.
எழில் மொழி என்பது பல ஆண்டுகளாக நான் செய்து வருவது; இதனை முழுமையாக 2013 ஆண்டில் பொது வெளியீடு செய்து இந்நாள் வரை பத்து பங்களிப்பாளர்கள் தங்கள் நேரத்திற்கும், அறிவிற்கும் லாபம் பொருட்படாமல் பங்காளித்துள்ளனர். தமிழ் நெஞ்சங்கள் எங்கும் ஆதரவு அளித்துள்ளனர். அனால் இவர்களின் வேலைகளும் எழில் மொழியில் இலக்கான சிறுவர் கணிமை கற்றலுக்கு கொண்டு சேர்க்க முடியவில்லையே என்று எனக்கு பல நாட்கள் தூக்கம் தொலைந்து போனது.
சமீபத்தில் சில மாறுதல்கள்; எழில் கிட்ஹப்-இல் இருந்தாலும் இதனை ஒரு முழுமை அடைந்த மென்பொருளாக கொள்ள முடியாது. மென்பொருள் என்றால் அதற்க்கு பயனாளர்களின் தேவைகளையும், அவசியமான பயன்பாட்டுகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். சும்மா மூல நிரலை மூஞ்சியில் விட்டு எறிஞ்சால் யாருக்கும் பயன்படாது. என்னமோ கோவத்தில் எழுதி விட்டதாக நீங்கள் தப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம். சுய விமர்சனமாக எனக்கு கொள்ளுங்கள்.
எழில் மொழியை கடைசி end-user பயனாளர்கிடத்து சேர்த்தால் என்பது என்னுடைய பொறுப்பு என்று ஒரு மூன்று ஆண்டுகளாக உணர்ந்து வருகிறேன். இதனை சிறப்பாக செய்ய எனக்கு ஒரு போர் படை தேவை. பத்து பேர் இருக்கிறார்கள் மீதி வாருங்கள்.
எழில் மொழியில் உள்ள “installer” திரட்டியில் இவை இடம் பெறவேண்டும் என்று எனக்கு தற்சமய நிபந்தனை:
ஒரு தவம், வரம் மறக்கப்படாது – முயற்சி திருவினையாக்கும். கை கூடுவோம், வாருங்கள்.