மூளை குழம்பி மொழி இயக்கியை எழில் மொழியில் வடிவமைப்பது எப்படி? இந்த கேள்வி வெகு சுவாரசியமானது – அதாவது கணிமை முழுவதும் ஒரு யெந்திரதின் பணியில் கணிக்கப்படுவது. இதை நான் ஒரு எழில் மொழியில் வடிவமைத்ததை பற்றி இங்கு எழுதுகிறேன்.
மூல நிரலுக்கு இங்கு github-இல் பார்க்கவும்.
இந்த மூளை குழம்பி மொழியில் உள்ள செயலுறுபுகள் என்ன ?

செயலுறுபு – (Operators) –
- ‘>’, ‘<‘ – செயலுறுபு நினைவகத்தை குறிக்கும் இடத்தை முன் அல்லது பின் அளவில் மாற்றும்
- ‘+’, ‘-‘ – செயலுறுபு நினைவகத்தின் மதிப்பை கூட்டும் அல்லது குரைக்கும்
- ‘[‘, ‘]’ – செயலுறுபு நிரலின்இயக்கம் பகுதியி அடுத்த அடைவுகுரிப்பிபிற்கு ‘]’, அல்லது ‘[‘ இற்கு தாவும் படி குறிக்கும்
- ‘,’,’.’ – என்ற செயலுறுபு உள்ளிடு, வெளியீடு, குறிக்கும்
முக்கியமான மைய்யகணினி இயக்கியின் பண்பு
நாம் வடிவமைக்கும் இயக்கியில் ப்ரோக்ராம் (நிரலின்) நினைவகம் மாற்றும் தரவுகளின் நினைவகமும் வெவ்வேறு இடங்களில் இருக்கு. இதனை கொண்டு, மடக்கு கட்டளைகளான ‘[‘, ‘]’ என்ற குறிப்புகளை ஒரு ஸ்டாக் (அடுக்கு) என்பதில் கொண்டு நாம் ஒரு சறியன இயக்கியை உருவாக்கலாம்.
இப்போது இந்த மைய்யகநினியில், மூளை குழம்பி மொழியில் எப்படி எண்களை கூட்டுவது ?
இரண்டு எண்களை கூட்டுவது
program_sum = “++>+++++.<[>+<-].” #sum of 2+5 in cell #2
“Hello World” நிரல் எழுதுவது
program_hello_world = “++++++++[>++++[>++>+++>+++>+<<<<-]>+>+>->>+[<]<-]>>.>—.+++++++..+++.>>.<-.<.+++.——.——–.”
# Ref: https://en.wikipedia.org/wiki/Brainfuck#Hello_World.21
இதன் இயக்கியை நாம் எழில் நிரலாக இங்கு படிக்கலாம்!