Last release of Open-Tamil was v0.71 from March 2018. Since then a lot of work has gone into making software with additional features, bug fixes, web interface for Tamilpesu.us
Today, I’m posting the combined efforts of Open-Tamil developers as an update/packaged release v0.8 for Open-Tamil here.
Please try the software in your development environment as:
$ pip install –upgrade open-tamil
and report any problems via email to ezhillang@gmail.com
இந்த நேரத்தில், ஓபன் தமிழ் கணினி தொகுப்பு சிறப்பாகவும் மேம்படுத்தப்பட்டும், பிழைகள் திருத்தப்பட்டும் வருவதற்கு ஒத்துழைப்பும், பங்களிப்பும் அளித்துவரும் நண்பர்கள், பொறியாளர்களுக்கும் மிக்க நன்றிகளை தெறிவித்துக்கொள்கிறேன்.
தொடர்ந்து அடுத்த ஆண்டும் செயல்படுவோமாக. நன்றி. வாழ்க வளமுடன்!
படம்: ஜூலை மலர், ஆண்டிற்கு ஒருமுறை மலரும். உபாயம், எனது தந்தை, வேளாண் வல்லுநர், திரு. அண்ணாமலை.
“தமிழ் தெரியுமா?” என்று நிறையபேர் ஒருவரை கேட்பது, இணையத்தின் தூரத்தில், பழக்கமான நாம் பார்க்கும் ஒரு விஷயம். காரணம் அடிக்கடி சிலரது சொற்களில் தலையெடுக்கும் சொற்பிழை. இவற்றை தவிர்க்க அவர்களுக்கு தேவை, பிழைகளை தடுக்கும்/திருத்தும் சொல்திருத்தி – spell checker – மூலம் ஒரு கட்டுரையை சோதித்தால். பல ஆண்டுகள் தமிழ் பயின்ற பொலிவு லேசுலே நமக்கும் கிடைக்கும். இந்த கட்டுரையும் அப்படி ஒரு (வளர்ச்சி நிலையில் உள்ள சொற்பிழை திருத்தியின் வாயில் சோதிக்கப்பட்டே பரிசுரம் செய்யப்பட்டது).
மாலை பொழுதில் மயக்கமென்ன ? தமிழில் உள்ள மயங்கொலி எழுத்துகள் நான்கு வரிசையில் அமைக்கலாம்,
ல, ழ, ள வரிசை.
ர, ற வரிசை.
ந, ன, ண வரிசை.
ங, ஞ, வரிசை.
சொல்திருத்தியில் கணினி நிரல் செய்யவேண்டியது இதுவே:
உள்ளீடு கொடுக்கபட்ட சொல் சரியானதா, அல்லது தவறானதா ?
தவறான சொல் என்ற பட்சத்தில் அதன் மாற்றங்கள் என்னென்ன ?
முதல் படியை எளிதாக ஒரு கையகராதியை கொண்டு செயல்படுத்தலாம். இதனை ஓபன்-தமிழ் (open-tamil) solthiruthi தொகுப்பில் Tamil VU மின் அகராதியை கொண்டு செயல்படுத்தியுள்ளோம். சரியான சொற்கள், அதாவது வேர் எடுத்த, புணர்ச்சி மற்றும் சாந்தி பிரிக்கப்பட்ட சொற்கள் அனைத்தும் சராசரி மின்அகராதியில் காணலாம். இதுவே எளிதான படி.
இரண்டாவது படிதான் ஒரு சொல்திருத்தியின் சிறப்பிற்கும், தரத்திற்கும், முக்கியமானது; இந்த பதிவில் எப்படி மயங்கொலி எழுத்து பிழைகளை திருத்தலாம் என்று சில எண்ணங்களை சமர்ப்பிக்கிறேன்.
உதாரணம் உரையின் சொல் “பளம்” என்பது பிழை என்று கண்டறியப்பட்டது. இது பள்ளம், அல்லது பழம் என்று இரு மாற்றங்களை எழுத்தாளர் நினைத்தாலும் இதனை பிழையாக உள்ளீடு செய்துள்ளார். இங்கு ள-ல-ழ மயக்கம் காணப்படுகிறது.
இதனை கணினி “பலம்”, “பழம்” என்றும் மாற்றுகளை உருவாக்கி இதில் அகராதியில் உள்ளவற்றை மட்டுமே வடிகட்டி எழுத்தாளருக்கு பரிந்துரை செய்யவேண்டும்.
இதனை கொண்டு அணைத்து மயங்கொலி பிழைகளை திருத்தும் ஒரு தன்மை கொண்ட சொல்திருத்தியை உருவாக்கலாம். உதாரணம்,
வளர்ச்சி நிலையில் உள்ள, தற்போது மென்பொருள் வடிவமைப்பில் உள்ள சொல்திருத்தி ஓபன்-தமிழ் தொகுப்பில் காணலாம்: [எச்சரிக்கை: இது இன்னும் பொது பயன்பாட்டிற்கு பொருத்தமானதல்ல]
muthu@brightone:~/devel/open-tamil$ ./spell.sh -i
>> பளம்
சொல் “பளம்” மாற்றங்கள்
(0) பம், (1) பளகு, (2) உளம், (3) பள், (4) அளம்
, (5) ஆளம், (6) பழம்
வணக்கம்!