2016-ஆம் ஆண்டுக்காண இலக்கு

இந்த ஆண்டு எனக்கு எழில் மொழியில் சில இலக்குகள் உள்ளன,
0. வலை தளத்தை சுலபமாக மேம்படுத்துவது
    – தற்போது உள்ள நிலையில் 3-முறை அல்லது 4-முறை AJAX request அனுப்பினால் மட்டுமே ezhillang.org/koodam/play/ விடையளிக்கிறது; தற்போது Chrome வலைஉலவி-யில் இது செயல்படுத்த வராது; மேலும் Django request-இல் 10 வினாடிகளுக்கு மேல் எதையும் செய்யமுடியாமல் தற்போது தாமதமாக செயல்படுகிறது.
1. எழில் மொழி Parser-ஐ மேம்பாடு செய்வது
2. Windows package உருவாக்குவது
3. Linux .deb மற்றும் rpm package உருவாக்குவது
4. தமிழ் மொழியில் பிழை தகவல்களை வெளியிடுவது
    (gettext போன்ற ஒரு அமைப்பை நான் இப்போது செய்து வருகிறேன்)
5. Ezhil மொழியிற்கு ஒரு IDE (PyGTK வழி, Eclipse-plugin) வழிகளில் முயற்சிகள்
இந்த இலக்குகளை உங்களுடனும், எனது மீதி நேரங்களிலும் செயல்படுத்தும் ஆர்வம் கொண்டவர்கள் ezhillang@gmail.com என்ற முகவரியில் மின் அஞ்சல் அனுப்பலாம். github தளத்திலும் தொடர்பு கொள்ளுங்கள்
நன்றி
முத்து,
பனியால் சூழ்ந்த பாஸ்டன்

எழில் மொழி எண் 0.8 வெளியீடு

வணக்கம் ,
எழில் மொழியின் அடுத்த அத்யாயம்
இன்று வெளியிடப்பட்டது - எண் 0.8 :

இதனை Python Package index வழியாக பெறலாம்;
(நீங்கள் ஏற்கனவே python நிறுவி
இருக்க வேண்டும்)

$ pip install --upgrade ezhil

குறிப்பாக:

   1. அணிகள் (arrays) 
   2. Profiling 
   3. பிழை தகவல்கள் மேம்பாடு 
   4. Python 3 தளத்தின் உபயோகம் 
   5. உரிலி பயன்பாடு 
   6. பல வழுக்களை நீக்கல் 

போன்ற பல அம்சங்களை கொண்டதாக இந்த
வெளியீடு அமைந்தது.

நன்றி,
முத்து
பாஸ்டன்

Bernoulli numbers

History:

உலகின் முதல் நிரல் இயற்றிய அரசி அடா லவ்லேஸ், (Bernoulli numbers) பெர்னொல்லீ எண்களை கணக்கிட்டார்!

Bernoulli number’s have the historic significance in computer programming – Lady Ada Lovelace’s “first” computer program for the Babbage Analytical engine calculated the Bernoulli number sequence. Here we do the same operations using a slightly easier method of recursion using the recurrence relation:

 \begin{align}  B_m(n) &= n^m-\sum_{k=0}^{m-1}\binom mk\frac{B_k(n)}{m-k+1} \\  B_0(n) &= 1. \end{align}

Code:

You can see the full code listing at Ezhil-Language repository

# பெர்னொல்லீ எண்களை கணக்கிடு
நிரல்பாகம் பெர்னொல்லீ_எண் ( m, n )
 @( m == 0 ) ஆனால்
  # பெர்னொல்லீ_எண்( 0, n ) = 1
  பின்கொடு 1.0
 இல்லை
  பெர்னொல்லீ = 0.0
  மொத்தம் = 0.0
  எண்கள் = range(0,m)
  @(எண்கள் இல் இவ்வெண்) ஒவ்வொன்றாக
    மொத்தம் = மொத்தம் + binomial_coeff(m,இவ்வெண்)*பெர்னொல்லீ_எண்(இவ்வெண்,n)/(m - இவ்வெண் + 1.0)	
    #பதிப்பி இவ்வெண், மொத்தம்
  முடி
  பெர்னொல்லீ = n^(m*1.0) - மொத்தம்
  பின்கொடு  பெர்னொல்லீ
 முடி
முடி

Tests:

You can run the code to verify the first few Bernoulli numbers:

B1 = பெர்னொல்லீ_எண்(1,0)
பதிப்பி "B1 = B(1,0)", B1
assert( (B1 - 0.5) < 1e-3 )

பதிப்பி "B2 = B(2,0)", பெர்னொல்லீ_எண்(2,0)
பதிப்பி "B4 = B(4,0)", பெர்னொல்லீ_எண்(4,0)

B6 = பெர்னொல்லீ_எண்(6,0)
பதிப்பி "B6 = B(6,0)", B6
assert( (B6 - 0.02380) < 1e-3 )

பதிப்பி "B4 = B(4,1)", பெர்னொல்லீ_எண்(4,1)

Credits: Photo from Flickr user.

எழில் மொழி மேம்பாடு கோவை – 3

Ezhil Language Tamil Programming

Happy Thanksgiving holiday 2015, to all readers. Quoting from Tamil adage,
“நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது அன்றே மறப்பது நன்று”.

This weekend Ezhil language got a
semantic analyzer framework, ‘execute’ function, Bernoulli number example; see more

0) add visit_binary_expr for the transformer
1) add semantic type check for string concat via + and string comparisons
2) add semantic type check test cases and driver script updates
3) Python3 compat of ezhil_transformer.py
4) unittest for pprint needs to be updated; TBD

11) add code for execute file and copy variables into local scope
12) add unittest for 1; resolves issue Language feature – execute / இயக்கு #101
13) add semantic validation step following parser
14) update visitors for Array and Dict
15) update test to relative paths

21) Bernoulli numbers : demoed in Ezhil

31) Update Python3 Interpreter loading by avoiding NoClobber errors
32) __init__ to use relative imports
33) __main__ module added to Python for style “python -m ezhil” to start interrpreter
34) testcases added for hexadecimal.n
35) ezhil_web.py updated to load on Python3 (print statements esp in new style)
36) envchecks, foo, ifparse, ifparse2 Ezhil programs are added to test suite

எழில் மொழி மேம்பாடு கோவை – 2

Ezhil - Tamil Programming Language

எழில் மொழி மேம்பாடு கோவை – 2

0) Enable profiling of Ezhil code.
1) Add tracebacks where necessary.
2) Add unittest and examples for profiling -gcd, fact, profile_test.py
3) Refactor the env behavior with runtime
4) test sentinel fixup to run goldenratio.n and array_wr.n
5) accept parameter called stacksize to Ezhil CLI
6) make exprs code to return a 255 exit code upon exception
7) make unittests for failing exprs code to run fast and less verbose
8) exprs code fails properly now

10) Add profiling information to any program on the fly; '-profile'
11) add entry/exit calls to profile("begin") and profile("results") as we go.
12) API update to raw_input to be i/p exception safe to Interpreter state
13) Handle exceptions better during raw_input calls
14) add capability to QuietTest unittest class
15) update hello.n to not break the prettyprinter test
16) HTML API update

21) Mathematics series + sequence operations for Ezhil programs
22) Ezhil Interpreter - ezhili
23) update test script

31) Add ezhil test for interactive programs using echo
32) simple demos
33) enable the programs stored in Tamil/unicode file names to be executed correctly
34) file_close failed due to serializing env - we wont attemp this from now on
35) hanoi.n - dont mix str and unicode
36) test - recover the filerw.n as well
37) down to 15 failures
38) update str.x methods to string.x which are encoding compatible;

40) unittest for running Python2 and 3 versions
41) Python3 recognizes Ezhil code; we are at starting line.
42) Code can be optimistically ported between 2-3
43) improve profiling output formatting;
44) update yinyang to skip the pause
45) input stream should not be opened in UTF-8 for Python2 nor Python3
46) dump_file is the name we use within tests
48) Fix call-stack and local scoped variable unwinding of interpreter if any exceptions were thrown.
49) This resolves issue #60. "After runtime error local variables are trashed; #60"
50) Python3 testing for Ezhil; unittest3 is not ready;
51) fixup the unittest and error stack during the file execution

51) make profiling work in Python3
52) update list/dictionary key/value retval in Python2/3 barriers
53) update test3 sentinel to use suffix 3 log files during test.

61) failures only in Python3

More at Ezhil Lang development site.

எழில் மொழி மேம்பாடு கோவை

Ezhil Language – Interpreter Updates : github

Ezhil - Tamil Programming Language
Ezhil – Tamil Programming Language
0) Output of expr evaluator returns base Python elements; this seems to show a good speedup in the interpreter

1) Assertions return a exit code 255 - issue #99 resolved
2) Add support for binary operators >> and << ; right and left shifts
  Language feature and issue #98
3) Add support for unary operator bit complement ~
4) Update logical not operator to return (T) / (F) along with poi-mei in its str representation
5) Builtin str in Python is used directly in Ezhil
6) scanner symbols have to be in sequence with the
  length of token types, otherwise odd things can happen
7) use x-platform coding in Ezhil; Windows platform returns "win32" for call sys_platform()
8) updated known failure list for testing.

9) add xor operation as a Ezhil builtin function; & add unittest
10) golden ratio
11) ezhil support for Python3
12) ezhil staircase light example
13) kludge of eval builtin
14) mathipeedu

If you are interested in contributing, please check our issues on github and send a pull-reqest.

Ezhil-Lang accepts input in UTF-8 or TSCII

Ezhil-Lang accepts input in UTF-8 or TSCII

Today I am submitting a change that enables the support for multiple encoding files in Ezhil interpreter. Primary motivation is to address some thinly veiled announcement of a new programming language – and simultaneously – a criticism of Ezhil interpreter published as part of INFITT 2014 proceedings. This change should put things to rest.

 We will accept programs written in other encoding like TSCII to demonstrate Ezhil is not limited by encoding.

Our internal encoding will continue to be UTF-8.

Ideally we may support any encoding capable of conversion into Unicode, via the open-tamil library or other freely available sources.

2014 தமிழ் கணிமை விருது – ஏற்புரை (Tamil computing award 2014)

06/13/2015

2014 தமிழ் கணிமை விருது – ஏற்புரை

இடம்:  தமிழ் இலக்கிய தோட்டம் ஆண்டு விழா, டோரான்டோ, கனடா

அரங்கத்தில் உள்ள அணைவருக்கும் வணக்கம். 2014-ஆம் ஆண்டு தமிழ் கணிமைக்கான விருதை த.இ.தொ/காலச்சுவடு அறக்கட்டளையின் பார்வையில் பெறுவது மிகுந்த மகிழ்ச்சி.

AcceptanceSpeech
Acceptance Speech at Toronto, Tamil Literary Garden for 2014 Tami Computing Award. Image (C) @donion

எழில் என்பது ஒரு நிரலாக்கல் மொழி (programming language). பெரும்பாலான நிரலாக்கல் மொழிகள் ஆங்கிலத்தில் தான் உள்ளன; தமிழில் கணிமையின் கட்டமைப்புகளை கையாண்டு சிலர் முயன்ற போதிலும், எழில் மொழி மற்றும் தனித்துவம் வாய்ந்து அமைந்துள்ளது. ஏனெனில் எழில் மொழி மற்றுமே கட்டளைகளை தமிழ் மொழி போன்ற சொற்றொடரியல் இலக்கணத்தை கொண்டது. இம்மொழியின் சிறப்பு அம்சம் –

 1. எழில் மொழி திற மூல மென்பொருள்; இணையம் வழி கற்றிடலாம்;  மற்றும்
 2. இதனை கற்பதற்கு “தமிழில் நிரல் எழுது” என்ற துணை கையேடும் வெளியிடப்பட்டுள்ளது.
 3. கணிமை மூதாதையர் அலன் டியூரிங் அவரின் வழி “டியூரிங் வரையறைக்குள் முழுமையாக” (Turing complete) உள்ளது.

தமிழ் அறிந்த சிறுவர்கள் தமிழினால் கணிமை துரையில் பின்தங்கியதாக இருக்க வேண்டாம். அந்த நிரலாக்கல் திறன் இன்று எழில் வழியாகவும் ஆங்கிலம் சாரததாக உள்ளது. கலை சொற்கள் இருப்பின் தமிழில் முதன்மையாக நிரல் எழுத வசதியில்லை. 2007-இல் தோற்றம் எடுத்தாலும், எனது முதுநிலை படிப்பின் காரணமாக 2009 முதல்- 2012 வரை  ஆண்டுகள் அதிகம் மேம்படுத்தப்படாமல் இருந்தது. திரும்ப 2013-முதல் இந்த திட்டம் மறுபிறப்பேடுத்து இணையம் வழி வழங்கப்பட்டது.

மொழி என்பதனால் தகவல் தொழில்நுட்பம் என்ற ஒரு கதவு திரக்கும் அளவு ஒரு பரிமாண வளர்ச்சியை எட்ட வேண்டும். தமிழில் மென்பொருள் எழுதுவதும், செயலியை உருவாக்குவதும் ஏன் குறைவாக உள்ளது? சில காரணங்களை சுட்டிக்காட்டலாம்.

 1. ஆங்கிலத்தில் இல்லாத சில நிரலாக்க மொழி சார்ந்த, குறியீடு சார்ந்த சிக்கல்கள்.
 2. சிறிய சந்தை அளவினாலும், இலாபம் குறைவாக இருப்பதால் பலர் தமிழில் பங்களிப்பதையோ, உருவாக்குவதையோ வெறும் வணிகரீதியில் பார்க்கின்றனர்.
 3. மேலும் கூறினால் தொழில் நுட்பத்தில் முதலீடு செய்யவும் இலாபம்
  பார்ககும் வரை தாக்குப்பிடிக்க பண வசதி செய்ய யாரும் இல்லை.
 4. அரசாங்கத்தின் டேன்டர் பெறுவசம் சார்ந்த தனியார் நிறுவனங்கள் மட்டும் உள்ளன.
 5. நாம் எப்படி அடுத்த கட்ட இளைஞரை தமிழ் பொறியியலில் தயார் செய்யலாம்?

இந்த கேள்விகளுக்கு விடையில்லாட்டியும், நல்ல முடிவு நிச்சயம் இருக்கு.

புலம்பெயர்ந்த தமிழர்களும், தமிழ் சமூகமும் தகவல் தொழில்நுட்பத்துறையில் தமிழ் வளர ஆதரவளிக்க வேண்டும். INFITT, த.இ.தோ (TLG) போன்ற அறக்கட்டளைகள் இதை தொடர்ந்து சிறப்பாக செய்யலாம்.

சிலோன் பெயர் கொடுத்த ஆங்கில சொல் ‘serendip’ – ‘serendipity’ –  என்று தேடாத அதிர்ஷ்டமாய் வந்த த.இ.தோ அழைப்பு மற்றும் விருது என் வாழ்வில் ஒரு மையில் கல் ஆக அமைந்தது.

விருது விழாவில் கலந்து கொள்வதற்கு வழிகாட்டிய திரு.  Tamil Literary Garden award ceremonyமுத்துலிங்கம் ஜயாவிற்கு, திரு. வெங்கட் அவருக்கும் நன்றி கூறுகிறேன். அஸ்டிரேலிய தமிழர் SBS Radio-வின் குலசேகரம் சஞ்சயன் அவரின் நுட்பமான வானொலி நேர்காணலிற்கும், தி இந்து பத்திரிகையாளர் கார்திக் அவருக்கும், எழில் மொழியினை பற்றிய செய்தியை பலர் அறியுமாறு செய்தமைக்கு நன்றி.

வழி முழுவதும் ஊக்குவித்த தாய்-தந்தையிற்கும், தம்பியிற்கும், நன்றி. டொறான்டொ வரை அழைத்து வந்த வாய்ப்புகளை ஏற்று செயல்பட ஊக்கம் அளித்த மனைவி சாலாவிற்கு நன்றி.

எழில் அமெரிக்காவில் தோற்றம் எடுத்ததால், அந்நாட்டின் மேல் கொண்ட நம்பிக்கையினாலும் அங்கு கிடைத்த வாழ்விற்கு நன்றி. எழில் மொழி பங்களிப்பாளர்களுக்கும், எழுத்தாளர் என். சொக்கன் அவருக்கும் நன்றி.

அலன் டியூரிங், பிரிட்டன் அடிமைப்படுத்திய இந்தியாவில் பிறந்தார்; இன்று அவர் கனவு கண்ட கணினி பல மொழிகள் பேசும். தமிழும் கூட!

நன்றி. வணக்கம்!

– முத்து அண்ணாமலை

அடிக்குறிப்பு :  அளித்த உரையின் சற்றே விரிவான கட்டுரை

Programming Languages and Tamil Computing – Ezhil Language and Beyond

Programming Language and Tamil Computing : Ezhil Language and Beyond

This is a new kind of blog post – sharing with the whole world, my discussion with some collaborators and friends.

Participants: Arun Ram, Elango Cheran, and Muthu Annamalai

Ezhil Language Tamil Programming
Ezhil Language Tamil Programming

Date: 05/16/15

Points of discussion:
I propose the following agenda for our 45min – 1hr meeting on Saturday, 05/16/2015 at 10 PM (EDT) on Google Hangouts.

1. How to make it easy for crossing bi-lingual barrier ?
2. Develop a more standardized Tamil kanimai/niralakkam vocabulary
3. Developing for ‘Tamil Focused’ software development
4. Discuss volunteering experiences in Tamil community; Ezhil experience
5. Developing documentation for end user, APIs, tutorials/books
6. Opportunities for collaborating between Ezhil and CLJ-Thamil
7. Discussion of Trie based approaches to Unicode Tamil letter collation

Conclusions:
1. Participants agree Tamil computing is useful at elementary level to show people from non bi-lingual
backgrounds “unnal mudiyum thambi/thangachi”
2. Elango, and Arun Ram propose a functional language based approach to learn computing in Tamil
3. Muthu touched upon some of structural aspects in rolling out the technology to students/target-audience
4. Arun Ram and Muthu agreed on ideas of Gamification to support the technology rollout to circumvent bureaucracy
KidsRuby project which Muthu had translated to Tamil was a good example. Also code.org Hour of Code used “Frozen”
Disney movie character based animations.
5. Elango said the grammar of Tamil language need not be followed in the programming language
6. Muthu emphasized Ezhil has a grammar that models the Tamil SOVA structure, compared to English SVOA.
7. All of us agreed that we could open up the keyword ratification/standardization again. Some of Ezhil language
survey results are found in the INFITT-2014 paper “How can you write code in Tamil” (Tamil paper).
8. Muthu suggested necessity of “soolal” surroundings of the Tamil computing environment like, books and articles
on data structures and algorithms, puzzles, etc., etc.
9. Muthu and Elango spoke on issues with Unicode standard for Tamil, UTF-8 and alternative TACE-16. However both
of them agreed that Unicode current standard is workable for developing Tamil software.
10. Muthu appreciated the efforts of CLJ-Thamil Clojure project, and suggested Elango to think of making it interactive
and web based like TryRuby.org and possibly rolling it out to Android platform.

Action items:
1. Act to re-open the keyword survey and suggest the results to the Tamil-VU or other INFITT technical groups.