This is collective work of our team underlying the website (written in Django+Python) highlighting various aspects of open-tamil like transliteration, numeral generation, encoding converters, spell checker among other things. At this time I hope to keep the website running through most of this year, and add features as git-repo https://github.com/Ezhil-Language-Foundation/open-tamil gets updated.
Thanks to Mr. Syed Abuthahir, many months ago, in winter of 2017, he has developed an interface for open-tamil on the web and shared with us under GNU Affero GPL terms. Later, we is added as part of main open-tamil as well.
At Team Ezhil we proposed to declare code-freeze for Ezhil for reaching v1.0 stable builds on major platforms. In this regard today the release candidate 1 for v0.99 is ready. During this process we addressed some long standing interpreter (core) bugs and updated examples for aesthetic comments.
1. எழில் மொழி பரிசோதனை வெளியீடு மே மாதம் 21-ஆம் நாள் வெளியீடு செய்யப்பட்டது; இந்த முறை சென்ற மாதம் செய்த மேம்பாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து Windows 64-bit தளத்தில் இயங்கும் வகை செய்யப்பட்டது.
கிடைக்கும் மேம்பாடுகள் :
(அ) license உரிமம் தெரியும் வகை செய்யப்பட்டது.
(ஆ) அமைப்புகள் (settings) சேமிக்கும் வகை வசதிகள்
(இ) சென்ற பரிசோதனை வெளியீதில் பிழை திருத்தங்கள்
(ஈ) எழில் இயக்கியில் பிழை செய்திகள் தமிழாக்கம் செய்தல்
2. இதனை http://ezhillang.org/download.html இங்கு பெற்று நீங்கள் ஒரு சிறுவர் சிறுமிக்கோ அல்லது ஒரு பள்ளிக்கூடத்தில் எழில் மொழியை பற்றி பேசலாம், அல்லது உங்கள் சுய பயன்பாட்டிற்கும் நீங்கள் பெறலாம்.
எழில் முன் பரிசோதனை திரட்டி windows மற்றும் linux-க்கு இங்கு பெறலாம். கடினமாக உழைத்த குழுவினருக்கு நன்றி.
இதில் நீங்கள் பெற கூடிய செயலிகள்,
எழில் இயக்கி “ezhili” (terminal – முனையம் இடைமுகம்)
எழில் திருத்தி “ezhuthi” (GUI – பயனர் திரை இடைமுகம்)
தமிழில் நிரல் எழுது புத்தகம்
உங்களுக்கு எதுவும் தடங்கல், பிழை செய்திகள், விருப்ப தேவைகள் இருந்தால் எல்லா அன்பாயும் மின்னஞ்சலில் ezhillang@gmail.com-இக்கு அனுப்பவும். திட்டினால் படிக்கவேமாட்டோம்.
படம் : திருத்தியுடன் எழில் மொழி செயலி; நிரல் இடது பக்கம், இயக்கிய வெளியீடு வலது பக்கம். சாளரத்தின் கீழ் இயக்கிய விவரம். இந்த செயலி எழில் படிக்க உதவும். (c) 2017 எழில் மொழி அறக்கட்டளை.
“எழில் மொழியை எப்படி வெளியீடு செய்வது ?” என்று சப்பென்று தலைப்பை வைத்து மேலும் ஒரு பதிவை எழுதலாம் என்று தொடங்கினேன். அனால் இன்று எனக்கும் பொறுமைக்கும் நீண்ட தூரம் ஆயிற்று. நம்ம மண்ணில் ஜே.கே. போன்றவர் இருந்ததாக கேள்வி, என்னமோ அவர் ஆசியில் ஒரு தலைப்பு. சில வெளிப்பாடுகள் அதுவாக வரவேண்டும், ஸ்வயம்பு போல.
“ஆளே இல்லாத கடையில ஏண்டா டீ ஆத்தூர்?” நக்கலுக்கு தமிழ் எந்த மொழியிர்க்கும் சளச்சது இல்லை. சிலர் நேரில் என்னை, சற்று வெகுளி தனமாக – இங்கு அமெரிக்காவில் முதல் தலைமுறை தமிழர் (எழுதவோ, நல்லா பேசவோ சாகஜமாக வராதவர்) – “ஏன் நீங்கள் தமிழில் மென்பொருள் ரீதியில் செயல்படுகிறீர்கள்” என்று கேட்டார்; என்னமோ செவ்வாயில் குடிபுகுவது போல நான் செய்யும் வேலைகள் எனது நண்பர்களிடமும், முகம் அறியா இணைய நபர்களிடமும் தெரியும். தமிழில் செயல்படுவது எனது சுய உறிமை, சில நேரம் பெருமை, தன்னிரக்கம், அகராதி என்றும் பலர் கூறலாம்; ஆனால், அதில் சமூக பொறுப்பு, அறிவியலாளரின் சமூக பார்வை, அறிவியல் மொழி வளர்ச்சி, தேடல், தொழில்நுட்ப கண்டெடுப்பு, தியானம் போன்ற நுட்ப்பமான விஷயங்களை மறந்து விடுவார்கள். சில நேரங்களில் எழில் எங்கே போகிறது என்று எண்ணுவேன்; ஆனால் முதலில் அந்த எட்டு வயது குழந்தைகள் நிரலாக்கத்தை தமிழ் வழி கற்பிக்கும் பொது தமிழ் கணிமை உலகம் நாம் அனைவரும் கூடி கண்ட வெற்றி என்பதில் ஐயமில்லை.
எழில் மொழி என்பது பல ஆண்டுகளாக நான் செய்து வருவது; இதனை முழுமையாக 2013 ஆண்டில் பொது வெளியீடு செய்து இந்நாள் வரை பத்து பங்களிப்பாளர்கள் தங்கள் நேரத்திற்கும், அறிவிற்கும் லாபம் பொருட்படாமல் பங்காளித்துள்ளனர். தமிழ் நெஞ்சங்கள் எங்கும் ஆதரவு அளித்துள்ளனர். அனால் இவர்களின் வேலைகளும் எழில் மொழியில் இலக்கான சிறுவர் கணிமை கற்றலுக்கு கொண்டு சேர்க்க முடியவில்லையே என்று எனக்கு பல நாட்கள் தூக்கம் தொலைந்து போனது.
சமீபத்தில் சில மாறுதல்கள்; எழில் கிட்ஹப்-இல் இருந்தாலும் இதனை ஒரு முழுமை அடைந்த மென்பொருளாக கொள்ள முடியாது. மென்பொருள் என்றால் அதற்க்கு பயனாளர்களின் தேவைகளையும், அவசியமான பயன்பாட்டுகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். சும்மா மூல நிரலை மூஞ்சியில் விட்டு எறிஞ்சால் யாருக்கும் பயன்படாது. என்னமோ கோவத்தில் எழுதி விட்டதாக நீங்கள் தப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம். சுய விமர்சனமாக எனக்கு கொள்ளுங்கள்.
எழில் மொழியை கடைசி end-user பயனாளர்கிடத்து சேர்த்தால் என்பது என்னுடைய பொறுப்பு என்று ஒரு மூன்று ஆண்டுகளாக உணர்ந்து வருகிறேன். இதனை சிறப்பாக செய்ய எனக்கு ஒரு போர் படை தேவை. பத்து பேர் இருக்கிறார்கள் மீதி வாருங்கள்.
எழில் மொழியில் உள்ள “installer” திரட்டியில் இவை இடம் பெறவேண்டும் என்று எனக்கு தற்சமய நிபந்தனை:
Platform Support: இயங்கு தளங்களில் வேலை செய்ய வேண்டும்:
Windows 64, 32 bit
Linux 64
திரட்டியில் வேண்டியவை : Installer package
எழில் மொழி திருத்தி ; இதனை ‘ezhuthi’ (எழுதி) என்று pygtk-இல் இங்கு இங்கு வடிவமைத்து வருகிறேன்.
எழில் மொழி ezhil module python library
தமிழில் நிரல் எழுது புத்தகம்
தமிழில் நிரல் எழுது புத்தகம் பயிற்சி நிரல்கள்
மேல் நிலை எழில் எ.கா. உதாரணங்கள்
பாடம், ஆசிரியர்களுக்கு உண்டான காணொளி, கேள்வி தாள், வினா-விடை பாட திட்டம்.
பரிசோதனைகள்
மொத்தமாக நிறுவுதல் பரிசோதனை (அணைத்து தளங்களிலும்)
நிரல் எழுதுவது
கோப்புகளை திறப்பது, இயக்குவது, சேமிப்பது
தனியன்க்கி பரிசோதனைகள் (automatic tests)
பயனர் நடப்பு பரிசோதனை (interactive tests)
வெளியீடு
md5 checksum, zip/exe/tgz package generation and upload to networks
release notes, credits, contribution notes, credits to open-source software
ஒரு தவம், வரம் மறக்கப்படாது – முயற்சி திருவினையாக்கும். கை கூடுவோம், வாருங்கள்.