சமிபத்தில், ஓப்பன் தமிழ் வரிசை எண் 0.96-இல் எண்ணவெல்லாம் நிரல் படுத்தி செய்யலாம் ? இவற்றை எங்களது ஆறு ஆண்டு முயற்சியாக @UTSC எண்ணிம தமிழ் துரையினரிடம் நேற்று வழங்கினேன். முழு வில்லைகள் (Slides) இங்கும். bit.ly/2G7mevE இங்கும் (PDF-வடிவில்) : ஒப்பன்தமிழ்-2020-ஓரு-பார்வை-2 பல ஆண்டுகளாக பங்களித்தவர்கள் அனைவருக்கும் நன்றி.
இந்த வழங்கலின் பின் எழுப்பப்பட்ட கேள்விகளானவை:
- NLTK-என்ற புகழ் பெற்ற ஆங்கலி இயல் மொழி பகுப்பாய்வு திறண்களைப்போன்ற சேவைகள் எப்பொழுது தமிழில் – அதுவும் ஓப்பன்-தமிழ் வழி கொண்டுவரப்படும் ? குறிப்பாக, POS – சொற்றொடர்களின் சொல் பகுப்பாய்வுகள், SynNet – சொல் இணைப்பு பின்னல்கள் ஆகியன.
- உரையினை சொல் எழுத்துக்களாக பகுப்பாய்வு செய்வதன் வேகம், செய்முறை நினைவகளவு (RAM) குறைவாகவும் இருப்பது பற்றிய கேள்விகள்; விக்கிபீடியாவின் தரவுகளில் சொல்தேடல்கள் (word search), சொல் எண்ணிக்கை (frequency) பட்டியலிடலின், concordance/collocation database creation பற்றியும், அவைகளை உருவாக்கும் இயக்க நேர அளவுகள் போன்றவற்றை பற்றியும் அதன் வேகப்படுத்துவதைப் பற்றியும் கேள்விகள் வந்தன.
- சொல்வனம் மின் இதழ்களின் வரலாற்று தரவுகளை எப்படி ஆரய்ச்சிக்காக கேட்பது என்பது பற்றியும் அவற்றில் உள்ள கலை சொற்கள், அறிவியல் ஆராய்ச்சி கட்டுரைகள், தமிழாக்க நடை அவற்றினை UTSC பல்கலைக்கழகத்திற்கும் மற்ற பொது ஆய்விற்கும் பெருவதன் அனுகுமுறை பற்றியும் கேள்விகள் எழுப்பப்பட்டன.
- இதன் கண் தமிழில் தரவுகள் அதிகமாக நேர்ந்தால், கைக்கெட்டினால் தமிழில் பல் புதுமைகள் செய்யலாம் என்பதும் ஒரு பேராசையாக இந்தத் தருனத்தில் தேன்றும். புதிய இயந்தர வழி கற்றலின் பால் உள்ள வாய்புகளுக்கு இணங்க எப்படி இந்த மென்பொருளை வளர்ப்பது என்பது ஒரு புதிய சவால். சந்திப்போம்!