சமிபத்திய வெளியாகவுள்ள, லோக்கோஷ் கனகராசு இயக்கத்தில், “Master” திரைப்பட பாடல் ஆல்பத்தில் ஒரு வித்தியாசமான, மனதைக்கவரக்கூடிய தமிழ்/தங்கிலிசு பாடல், “குட்டி story,” இடம் பெற்றது. இதை பிரபல திரைப்பட நடிகர் விஜ்ய் பாடி இசைவாக அமைந்தது. இதை அனுராஜா காமராஜ் பாடல்வரிகள் எழுதி, அநிருத்ரவிசந்தர் இசைஅமைத்துள்ளார்.
இந்த பாடல் வரிகளை அலசிப்பார்த்தால் என்ன தெறிகின்றது நமக்கு ? இதில் முதலில் நிறைய ஆங்கில சொற்கள் படத்தின் ஏதோ ஒரு சூழலில் இயற்கையாக வரும் தருணத்தை குறிக்க இப்படி பாடல் எழுதியிருக்காங்க என்று கொள்ளலாம். காப்புரிமம் காரணமாக பாடல்வரிகளை இங்கு முழுதாக இடமுடியாவிட்டாலும், நாம் ஓப்பன் தமிழ் கொண்டு இந்த பாடல்களை அலசினால், சுமார் இருபது சதம் சொற்கள் மட்டுமே தமிழ் வரிகளை கொண்டதாக அமைந்திருக்கிறது.
எதுகை மோனையில் {“happy”,”crappy”} – “மாப்பி” என்று தமிழ்-ஆங்கிலம் தங்கிலிஷில் பூந்து விளையாடுகிறார் பாடலாசிரியர்.
பாடல் சற்று கட்டமைப்பில் (rhyme-scheme) எளிமையாக இருந்தாலும்கூட பாட்டில் ஏதோ ஒரு வாழ்க்கையில் சமரசத்தையும், ஒரு நம்பிக்கையூட்டும் நோக்கில் கருத்துக்கள் வெளிவந்திருக்கின்றன. போராட்ட மனப்பாங்கில் இருந்து வெளிவந்தும், மன அவதிகளில் இருந்தும் ஒரு ஓய்வெடுக்க பாடகர் வலியுருத்துகிறார்.
முழு நிரல் இங்கு பார்க்கலாம்:
#!/bin/env python3 | |
from codecs import open | |
from tamil import utf8 | |
import re | |
with open('kuttistory.txt','r','utf-8') as fp: | |
data = fp.readlines() | |
class Stats: | |
__fields__ = ('total_words','tamil_words') | |
stats = Stats() | |
stats.total_words=0.0 | |
stats.tamil_words=0.0 | |
for line in data: | |
all_words = re.split('\s+',line.strip()) | |
ta_words = list(utf8.get_tamil_words(utf8.get_letters(line))) | |
print(all_words,len(ta_words)) | |
stats.tamil_words += len( ta_words ) | |
stats.total_words += len(all_words) | |
#tamil fraction | |
taf = float(stats.tamil_words)/stats.total_words | |
print('English = {0}%, Tamil = {1}%'.format(100.0*(1-taf),100.0*(taf))) |